பியூஷ் சாவ்லாவுக்கு அடுத்து இரண்டாவது வீரராக குர்னூர் பிரார் நிகழ்த்திய அசத்தல் சாதனை – விவரம் இதோ

Gurnoor Brar and Piyush Chawla
- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தரம்சாலா நகரில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர் குர்னூர் பிராருக்கு அறிமுகம் வாய்ப்பு வழங்கப்பட்டது. உள்ளூர் போட்டியில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்ட வேளையில் தான் அறிமுகமான முதல் போட்டியிலேயே 3 விக்கெட்டுகளை கைப்பற்றி குர்னூர் பிரார் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்தார்.

பியூஷ் சாவ்லாவுக்கு அடுத்து இரண்டாவது பவுலராக குர்னூர் பிரார் நிகழ்த்திய சாதனை :

அதற்கடுத்து இன்று லக்னோ நகரில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ள அவர் இன்றைய போட்டியிலும் 10 ஓவர்களை வீசி 60 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். தொடர்ந்து இரண்டு போட்டியிலும் அவரது பந்துவீச்சு சிறப்பாக இருந்து வருவது பலரது மத்தியிலும் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

- Advertisement -

அதோடு அவருக்கு தொடர்ச்சியாக ஒருநாள் அணியின் வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற ஆதரவும் குவிந்து வருகிறது. இவ்வேளையில் இன்றைய இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவர் எடுத்த 3 விக்கெட்டுகளின் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பியூஷ் சாவ்லாவிற்கு அடுத்து இரண்டாவது இந்திய வீரராக ஒரு மாபெரும் சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.

அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய அறிமுகப் போட்டி மற்றும் இரண்டாவது போட்டி என இரண்டு போட்டியிலுமே தலா 3 விக்கெட்டுகளை எடுத்த வீரராக ஃபியூஷ் சாவ்லா மட்டுமே இதுவரை இருந்து வந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : கபில் தேவிற்கு அடுத்து இரண்டாவது இந்திய வீரராக சுப்மன் கில் நிகழ்த்திய சாதனை – விவரம் இதோ

இந்நிலையில் இன்றைய இரண்டாவது போட்டியில் குர்னூர் பிராரும் 3 விக்கெட் எடுத்துள்ளதால் அவருடைய அறிமுகப் போட்டி மற்றும் இரண்டாவது போட்டி என 2 ஆட்டங்களிலும் 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது இந்திய பவுலராக சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதோடு இன்றைய இரண்டாவது போட்டியில் புதிதாக அறிமுகமான பிரின்ஸ் யாதவும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அசத்தினார்.

Advertisement