என்ன தான் சொன்னாலும்.. அந்த ரெண்டுலயும் நம்ம இந்திய அணி ரொம்ப ஓவர் ரேட்டட்.. ஸ்ரீகாந்த்

Kris Srikkanth 2
- Advertisement -

நிறைவு பெற்ற 2023 காலண்டர் வருடத்தில் இந்திய கிரிக்கெட் அணி சாதாரண இரு தரப்பு தொடர்களில் வெற்றி பெற்று ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தது. இருப்பினும் முக்கியமான 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மற்றும் உலகக்கோப்பை ஃபைனலில் ஆஸ்திரேலியாவுக்கு சுமாராக விளையாடிய இந்தியா கோப்பையை கோட்டை விட்டது ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது.

சரி அதற்கு நிகராக தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று இந்தியா சாதிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடைபெற்ற முடிந்த முதல் போட்டியில் உலகின் நம்பர் ஒன் அணியாக இருந்தும் கொஞ்சமும் போராடாத இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்து 6வது இடத்திற்கு சரிந்துள்ளது.

- Advertisement -

ஓவர்ரேட்டட் அணி:
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இந்தியா தரமான அணியாக செயல்பட்டு வருவதாக முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். ஆனால் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இந்தியா ஓவர்ரேட்டட் அணியாக செயல்பட்டு வருவதாக ஆதங்கத்தையும் விமர்சனத்தையும் முன்வைக்கும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்ருமாறு.

“டி20 கிரிக்கெட்டில் இந்தியா ஓவர்ரேட்டட் அணியாக இருக்கிறது. இருப்பினும் ஒருநாள் கிரிக்கெட்டில் நாம் சிறந்த அணியாக இருக்கிறோம். குறிப்பாக 2023 உலகக் கோப்பை ஃபைனல் ஒரு மோசமான போட்டி அமைந்தது. இது போன்ற போட்டிகளில் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் அடிப்படையில் தான் வெற்றி கிடைக்கும். எனவே அது அதிர்ஷ்டத்தை பொறுத்தது. சமீபத்தில் ஒருநாள் உலக கோப்பையை வெல்வதே ஒரு வீரரின் மிகப்பெரிய சாதனையாக இருக்கும் என்று ரோகித் சர்மா சொன்னதை நான் படித்தேன்”

- Advertisement -

“நாம் ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் சில நேரங்களில் திறமைக்கு குறைவாக செயல்படுகிறோம். இருப்பினும் கூட ஒருநாள் கிரிக்கெட்டில் நாம் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற உலகின் எந்த நாடுகளில் விளையாடினாலும் அதிரடியான அணியாக இருக்கிறோம். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 2 – 3 வருடங்களில் நாம் ஓவர் ரேட்டட் என்பதை உறுதியாக சொல்ல வேண்டும்”

இதையும் படிங்க: பேருக்கு தான் பெருமை.. ஒன்னுக்கும் உதவாத அதை மறந்துடுங்க.. இந்திய அணியை விமர்சித்த ஸ்ரீகாந்த்

“விராட் கோலி கேப்டனாக இருந்த போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா அபாரமாக இருந்தது. இங்கிலாந்தில் அதிரடியாக விளையாடிய நாம் தென் ஆப்பிரிக்காவில் கடினமாக போராடி ஆஸ்திரேலியாவில் வென்றோம். அந்த 2 – 4 வருடங்கள் மட்டுமே நன்றாக அமைந்தது” என்று கூறினார். அவர் கூறுவது போல டி20 கிரிக்கெட்டில் கடைசியாக 15 வருடங்களுக்கு முன் 2007இல் உலகக் கோப்பையை வென்ற இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் 2021, 2023 ஆகிய அடுத்தடுத்த சாம்பியன்ஷிப் ஃபைனல்களில் தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement