பேருக்கு தான் பெருமை.. ஒன்னுக்கும் உதவாத அதை மறந்துடுங்க.. இந்திய அணியை விமர்சித்த ஸ்ரீகாந்த்

Kris Srikkanth
- Advertisement -

தென்னாபிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் விளையாடி வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது. இத்தனைக்கும் தரவரிசையில் நம்பர் ஒன் கிரிக்கெட் அணியாக ரோகித் சர்மா தலைமையில் விராட் கோலி போன்ற நட்சத்திர முதன்மை வீரர்களை கொண்டிருந்தும் அந்த போட்டியில் கொஞ்சமும் போராடாமல் இந்தியா தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

அதனால் தென்னாபிரிக்க மண்ணில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்ற இந்திய அணியின் கனவு மீண்டும் கனவாகவே போயுள்ளது என்று சொல்லலாம். மேலும் இந்த தோல்வியால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருந்து 6வது இடத்திற்கு சரிந்துள்ள இந்தியா குறைந்தபட்சம் தொடரை சமன் செய்ய கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்க உள்ளது.

- Advertisement -

ஒன்னுக்கும் உதவல:
முன்னதாக டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட்டின் ஐசிசி தரவரிசையிலும் தற்போது இந்தியா உலகின் நம்பர் ஒன் அணியாக ஜொலித்து வருகிறது. ஆனாலும் கடந்த வருடம் நடைபெற்ற 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக் கோப்பை ஆகிய தொடர்களின் ஃபைனலில் ஆஸ்திரேலியாவிடம் சொதப்பிய இந்தியா கோப்பையை கோட்டை விட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

இது மட்டுமல்லாமல் கடந்த 10 வருடங்களாகவே சாதாரண இரு தரப்பு தொடர்களில் பெரும்பாலும் எதிரணிகளை தெறிக்க விட்டு தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்கும் இந்தியா ஐசிசி தொடரில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. அதனால் ஒன்றுக்கும் உதவாத ஐசிசி தரவரிசையை தயவு செய்து மறந்து விட்டு தரமான வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து முன்னேறுங்கள் என்று இந்திய அணி நிர்வாகத்தை முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளது பின்வருமாறு.

- Advertisement -

“நாம் ஐசிசி தரவரிசையை மறக்க வேண்டும். ஏனெனில் நாம் எப்போதும் 1 – 2வது இடத்தில் தான் இருப்போம். என்னை கேட்டால் அந்த தரவரிசை என்பது தங்களுடைய முழு திறமைக்கு செயல்படாத ஓவர்ரேட்டட் வீரர்களை கொண்ட பட்டியலாகும். அல்லது முழுமையான வாய்ப்புகளை பெறாத குல்தீப் யாதவ் போன்றவர்கள் இடம் பெறும் பட்டியலாகும்”

இதையும் படிங்க: உங்கள வெச்சுகிட்டு ஜெயிக்க முடியாது.. 3வது டெஸ்டில் முக்கிய வீரரை கழற்றி விட்ட பாகிஸ்தான்

“நீங்கள் சிறந்த அணியாக இருக்க வேண்டுமெனில் உங்களுடைய சொந்த மண்ணில் பெரியவர்களாக இருக்க வேண்டும். ரிஷப் பண்ட் நெருப்பாக விளையாடிய போது அதை தான் நாம் செய்தோம். ஆனால் நீங்கள் அவர் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் அடித்ததை மட்டுமே பேசுகிறீர்கள். கடந்த கால சாதனைகளை பார்த்துக் கொண்டே நீங்கள் ஓய்வெடுத்தால் எப்போதும் முன்னேற மாட்டீர்கள். எனவே இந்திய அணி கடந்த 18 மாதங்களில் எப்படி செயல்பட்டார்கள் என்பதை பார்க்க வேண்டும்” என கூறினார்.

Advertisement