உங்கள வெச்சுகிட்டு ஜெயிக்க முடியாது.. 3வது டெஸ்டில் முக்கிய வீரரை கழற்றி விட்ட பாகிஸ்தான்

PAK Babar Shaheen
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் 2 போட்டிகளில் பாகிஸ்தான் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்தது. அதன் காரணமாக ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக ஒரு தொடரை வெல்ல வேண்டுமென்ற பாகிஸ்தானின் கனவு மீண்டும் கனவாகவே போனது. சொல்லப்போனால் கடைசியாக 1995இல் வென்ற அந்த அணி அதன் பின் கடந்த 28 வருடங்களாக ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து 16 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது.

அதனால் பெரிய பின்னடைவை சந்தித்துள்ள பாகிஸ்தான் குறைந்தபட்சம் இந்த தொடரில் ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்ப்பதற்கு ஜனவரி 3ஆம் தேதி சிட்னியில் துவங்க உள்ள கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்க உள்ளது. முன்னதாக பாகிஸ்தான் அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் துறையின் சூப்பர் ஸ்டார்களாக பாபர் அசாம் மற்றும் சாகின் அப்ரிடி ஆகியோர் கருதப்படுகிறார்கள்.

- Advertisement -

ஜெயிக்க முடியாது:
இருப்பினும் இந்த 2 வீரர்களுமே கடந்த வருடம் நடைபெற்ற 2023 ஆசிய மற்றும் உலகக் கோப்பையில் சுமாராக செயல்பட்டது பாகிஸ்தானின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதனால் பாபர் அசாம் தம்முடைய கேப்டன்ஷிப் பதவிகளை மொத்தமாக ராஜினாமா செய்து இந்த தொடரில் ஒரு சாதாரண வீரராக விளையாடியும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் சுமாராகவே செயல்பட்டு வருகிறார்.

அதே போல ஸ்விங் செய்து எதிரணிகளை தெறிக்க விடுவார் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் கொண்டாடும் சாகின் அப்ரிடியும் இந்த தொடரில் ஆஸ்திரேலிய வீரர்களிடம் அடி வாங்கி சுமாராகவே செயல்பட்டார். இந்நிலையில் சிட்னியில் நடைபெறும் 3வது போட்டிக்கான தங்களுடைய 11 பேர் கொண்ட அணியில் ஷாஹீன் அப்ரிடியை கழற்றி விட்டுள்ள பாகிஸ்தான் அவருக்கு பதிலாக 2 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்துள்ள சஜித் கான் விளையாடுவார் என்று அறிவித்துள்ளது.

- Advertisement -

குறிப்பாக இந்த தொடரில் அறிமுகமாக களமிறங்கிய அமீர் ஜமால் 12 விக்கெட்டுகள் எடுத்து அப்ரிடியை விட அபாரமாக செயல்பட்டார். எனவே 3வது போட்டியில் போராடுவதற்கு அவரே போதும் என கருதும் பாகிஸ்தான் ஷாஹீன் அப்ரிடிக்கு ஓய்வு கொடுத்துள்ளது. அதே போல முதலிரண்டு போட்டிகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத துவக்க வீரர் இமாம்-உல்-ஹக்கையும் இப்போட்டியில் நீக்கியுள்ள பாகிஸ்தான் அவருக்கு பதிலாக 21 வயது இளம் வீரர் சாய்ம் ஆயுப் விளையாடுவார் என அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஃபார்முக்கு திரும்ப விராட் கோலிய ஃபாலோ பண்ணுங்க.. பாபர் அசாமுக்கு முஸ்தாக் அஹமத் அறிவுரை

சொல்லப்போனால் பாபர் அசாமும் சுமாராக செயல்படுவதால் நிறைய விமர்சனங்கள் எழுந்துள்ளன. இருப்பினும் உலகத்தரம் வாய்ந்த வீரரான பாபர் அசாம் விரைவில் ஃபார்முக்கு திரும்பி அசத்துவார் என்று நம்புவதாக புதிய கேப்டன் ஷான் மசூத் ஆதரவு தெரிவித்ததால் 3வது போட்டியில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement