நியூஸிலாந்தில் ரச்சின் ரவீந்திராவுக்கு பெரிய சர்ப்ரைஸ் கொடுத்த சிஎஸ்கே ரசிகர்.. வைரல் பதிவு

Rachin Ravindra
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் மாதம் இறுதியில் துவங்க உள்ளது. அதற்காக கடந்த டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெற்ற வீரர்கள் ஏலத்தில் அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்கின. அதில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் நியூசிலாந்தை சேர்ந்த டார்ல் மிட்சேல், ரச்சின் ரவீந்தரா ஆகிய 2 வெளிநாட்டு வீரர்களை வாங்கியது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

ஏனெனில் 2023 உலகக் கோப்பையில் தரமான பவுலிங்கை கொண்ட அணியாக செயல்பட்ட இந்தியாவுக்கு எதிராக நடந்த 2 போட்டிகளிலும் சதமடித்த டார்ல் மிட்சேல் மொத்தம் 500க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து இந்திய சூழ்நிலைகளில் தம்மை அசத்த முடியும் என்பதை காண்பித்தார். அதனால் ஓய்வு பெற்ற ராயுடுவின் இடத்தை நிரப்புவதற்காக அவரை 14 கோடி என்ற பெரிய தொகைக்கு சென்னை வாங்கியது.

- Advertisement -

ரசிகரின் சர்ப்ரைஸ்:
அதே போல 10 போட்டிகளில் 3 சதங்கள் உட்பட 578 ரன்கள் குவித்து அசத்திய ரச்சின் அறிமுக உலகக் கோப்பையிலேயே அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை உடைத்து புதிய உலக சாதனை படைத்தார். அதனால் 5 கோடிகளுக்கு மேல் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவரை வெறும் 1.8 கோடி என்ற குறைந்த தொகைக்கு சென்னை வாங்கியது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்தது.

இந்நிலையில் வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்று முடிந்த டி20 தொடரில் விளையாடிய ரச்சின் ரவீந்தரா அடுத்ததாக நடைபெற உள்ள தென்னாப்பிரிக்க தொடருக்காக பயிற்சிகளை மேற்கொள்ள காரில் சென்றுள்ளார். அப்போது சாலை ஓரத்தில் நின்ற ஒரு ரசிகர் தம்முடைய கையில் சிஎஸ்கே அணியின் முக்கிய படங்கள் அடங்கிய பதாகைகளைப் பிடித்துக் கொண்டு அவருக்காக காத்திருத்தார்.

- Advertisement -

அதைப் பார்த்த ரவீந்திரா உடனடியாக காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கி அந்த ரசிகரை பார்த்தார். அதனால் மிகவும் மகிழ்ச்சியடைந்த அந்த ரசிகர் தம்முடைய பதாகையில் ஆட்டோகிராப் போட்டு கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டார். அதனால் மிகவும் நெகிழ்ச்சியடைந்த ரச்சின் ரவீந்திரா அந்த ரசிகருக்கு ஆட்டோகிராப் போட்டு போட்டுக் கொடுத்து முகத்தில் புன்னகையை வர வைத்தார்.

இதையும் படிங்க: ஃபார்முக்கு திரும்ப விராட் கோலிய ஃபாலோ பண்ணுங்க.. பாபர் அசாமுக்கு முஸ்தாக் அஹமத் அறிவுரை

அந்த வகையில் இன்னும் சிஎஸ்கே அணிக்காக விளையாடாததற்கு முன்பாகவே அந்த அணியின் ரசிகர் ரச்சின் ரவீந்தராவுக்கு நியூசிலாந்தில் இப்படி ஒரு பெரிய சர்ப்ரைஸ் கொடுத்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை தொடர்ந்து எம்எஸ் தோனி தலைமையில் முதல் முறையாக விளையாடுவதற்காக மிகுந்த ஆவலுடன் காத்திருப்பதாக ஏற்கனவே அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement