ஃபார்முக்கு திரும்ப விராட் கோலிய ஃபாலோ பண்ணுங்க.. பாபர் அசாமுக்கு முஸ்தாக் அஹமத் அறிவுரை

Mushtaq Ahmed
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அங்கு நடைபெற்ற வரும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்தது. அதனால் 1995க்குப்பின் தொடர்ந்து 28வது வருடமாக ஆஸ்திரேலிய மண்ணில் 16வது போட்டியில் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் குறைந்தபட்சம் ஜனவரி 3இல் துவங்கும் கடைசி போட்டியில் வென்று ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்க்கும் முனைப்புடன் விளையாட உள்ளது.

முன்னதாக 2017இல் அறிமுகமாகி 2019 முதல் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய பாபர் அசாம் இந்தியாவின் விராட் கோலியை விட மகத்தானவர் என்று பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் கொண்டாடினார்கள். இருப்பினும் ஜிம்பாப்வே, நேபாள் போன்ற அணிகளுக்கு எதிராகவே அசத்திய அவர் முதன்மை அணிகளுக்கு எதிராக தடுமாற்றமாக செயல்பட்ட நிலையில் கடந்த வருடம் நடந்த 2023 ஆசிய மற்றும் உலகக் கோப்பையில் சுமாராக விளையாடி பாகிஸ்தானின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

- Advertisement -

ஃபாலோ பண்ணுங்க:
குறிப்பாக ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக அவமான தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் உலகக் கோப்பையில் தொடர்ந்து 8வது முறையாக இந்தியாவிடம் சந்தித்தது. அதனால் விமர்சனங்கள் எழுந்த நிலையில் அந்த தோல்விகளுக்கு பொறுப்பேற்ற பாபர் அசாம் அனைத்து விதமான கேப்டன்ஷிப் பதவிகளையும் ராஜினாமா செய்வதாக அறிவித்து தற்போது சாதாரண வீரராக விளையாடி வருகிறார்.

ஆனாலும் இந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் மோசமாக செயல்பட்டு வரும் அவர் தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளார். இந்நிலையில் 2019க்குப்பின் சதமடிக்காமல் தடுமாறிய போது ஓய்வெடுத்து கம்பேக் கொடுத்த விராட் கோலியை போல புத்துணர்ச்சியுடன் ஃபார்முக்கு திரும்பி அசத்துவதற்காக நீங்களும் தற்காலிகமாக ஓய்வு எடுங்கள் என பாபர் அசாமுக்கு முன்னாள் வீரர் முஸ்தக் அஹ்மத் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி பாகிஸ்தான் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “உலகம் முழுவதிலும் நாம் பயிற்சிகளை கொடுக்கிறோம். அப்போது ஒரு வீரர் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார் என்று உணரும் போது அவருக்கு 2 – 3 போட்டிகளில் ஓய்வு கொடுப்போம். அதே போல விராட் கோலி ஃபார்மின்றி தடுமாறிய போது ஓய்வெடுத்தார். அதன் பின் விளையாட திரும்பிய அவர் தற்போது எவ்விதமான தடுமாற்றத்தையும் சந்திக்கவில்லை”

இதையும் படிங்க: காணாம போனதை கொடுங்க.. கடைசி போட்டிக்கு முன் முக்கிய பொருளை தொலைத்த வார்னர்.. ரசிகர்களிடம் கோரிக்கை

“எனவே இந்த விவகாரத்தில் அணி நிர்வாகம் உரிமை எடுத்து பாபர் அசாமிடம் ஓய்வெடுக்குமாறு அறிவுரை கொடுக்க வேண்டும். ஏனெனில் கடந்த காலங்களில் அபாரமான செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் நம்முடைய ஹீரோ. அவர் உலக அரங்கில் டாப் வீரராகவும் கருதப்படுகிறார். இருப்பினும் கடந்த ஆசிய மற்றும் உலகக் கோப்பையில் தடுமாறிய அவர் தற்போது கேப்டன்ஷிப் பதவியை இழந்துள்ளார்” என்று கூறினார்.

Advertisement