காணாம போனதை கொடுங்க.. கடைசி போட்டிக்கு முன் முக்கிய பொருளை தொலைத்த வார்னர்.. ரசிகர்களிடம் கோரிக்கை

David Warner
- Advertisement -

பாகிஸ்தானுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் வென்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியுள்ளது. அதனால் பாகிஸ்தானுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் 28 வருடங்களாக தோல்வியை சந்திக்காத அந்த அணி தொடர்ந்து 16வது முறையாக வெற்றி வாகை சூடி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.

இதைத்தொடர்ந்து இத்தொடரின் இறுதிப்போட்டி ஜனவரி 3ஆம் தேதி சிட்னி நகரில் நடைபெற உள்ளது. அந்த போட்டியுடன் நட்சத்திர துவக்க வீரர் டேவிட் வார்னர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்தும் விடை பெறுவதாக 2024 புத்தாண்டு தினத்தன்று அவர் அறிவித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

- Advertisement -

திருப்பி கொடுங்க:
கடந்த 2009இல் அறிமுகமாகி அதிரடி துவக்க வீரராக செயல்பட்ட அவர் 2015 மற்றும் 2023 உலகக் கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார். மேலும் 2021 டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு தொடர்நாயகன் விருது வென்று முக்கிய பங்காற்றிய அவர் நவீன கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார்.

அந்த வகையில் தன்னுடைய சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் விடை பெற உள்ள அவரை வழியனுப்ப ரசிகர்கள் தயாராகியுள்ளனர். இந்நிலையில் சிட்னி மைதானத்திற்கு வரும் போது தம்முடைய முதுகுப் பையை யாரோ எடுத்து விட்டதாக தெரிவித்துள்ள டேவிட் வார்னர் அதற்குள் தன்னுடைய டெஸ்ட் அறிமுக போட்டியில் கொடுத்த ஆஸ்திரேலியாவின் பச்சை நிற தொப்பிகள் இருப்பதாக கூறியுள்ளார்.

- Advertisement -

எனவே யார் எடுத்திருந்தாலும் அதை திருப்பிக் கொடுக்குமாறு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கத்துடன் கோரிக்கை வைத்துள்ள அவர் இது பற்றி பேசியுள்ளது பின்வருமாறு. “துரதிஷ்டவசமாக யாரோ எனது பையுடன் எனது மகள்களின் பரிசுப் பொருட்கள் இருந்த பையையும் எடுத்துச் சென்றுள்ளனர். அந்தப் பைக்குள் என்னுடைய பச்சை நிற தொப்பிகளும் இருக்கின்றன”

இதையும் படிங்க: தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கும் டேவிட் வார்னருக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் – பேட் கம்மின்ஸ் பேட்டி

“எனவே அது எனக்கு உணர்வுபூர்வமானது என்பதால் என்னுடைய கைக்கு மீண்டும் திரும்பி வருவதை விரும்புகிறேன். ஒருவேளை நீங்கள் என்னுடைய முதுகு பையை விரும்பினால் அதை நான் கொடுக்க தயாராக இருக்கிறேன். அதை என்னிடமோ அல்லது ஆஸ்திரேலிய வாரியத்திடமோ திருப்பி கொடுக்கும் போது நீங்கள் எந்த பிரச்சினையும் சந்திக்க மாட்டீர்கள். எனவே நீங்கள் என்னுடைய பச்சை தொப்பியை கொடுத்தால் இதை உங்களுக்கு நான் தர மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று தம்மிடமுள்ள மற்றொரு முதுகு பையை திருப்பி கொடுக்கும் நபருக்கு கொடுக்க தயாராக இருப்பதாக டேவிட் பர்னர் கோரிக்கை வைத்துள்ளார்.

Advertisement