இந்த ட்விஸ்டை எதிர்பாக்கல.. அந்த தொடரில் இந்தியா தான் யாராலும் நெருங்க முடியாத டேஞ்சரான டீமா இருப்பாங்க – சோயப் அக்தர் யூடர்ன்

Shoaib Akhtar 3
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன் இலங்கையை அதனுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா 8வது முறையாக கோப்பையை வென்று எதிரணிகளால் எளிதில் தொட முடியாத ஆசிய கண்டத்தின் மாஸ் சாம்பியனாக சாதனை படைத்துள்ளது. குறிப்பாக 2023 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெற்ற இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்தியா தற்போது சொந்த மண்ணில் ஆசிய சாம்பியனாக கெத்தாக களமிறங்க உள்ளது.

அதை விட இத்தொடருக்கு முன்பாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இடது கை பவுலர்களுக்கு எதிராக தடுமாறுவது, பலவீனமான மிடில் ஆர்டர், பும்ரா முக்கிய வீரர்கள் காயத்தை சந்தித்திருந்தது போன்ற பல பின்னடைவுகள் இந்திய அணியில் இருந்தன. ஆனால் ஷாஹீன் அப்ரிடி போன்ற தரமான இடது கை பவுலரை சூப்பர் 4 சுற்றில் இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்கி ஃபார்முக்கு திரும்பி தங்களது தரத்தை நிருபித்தனர்.

- Advertisement -

அக்தர் பாராட்டு:
அதே போல பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் 66/4 என சரிந்த போது மிடில் ஆர்டரில் இசான் – பாண்டியா ஆகியோர் 266 ரன்கள் குவிக்க உதவி இந்தியாவை காப்பாற்றினர். மேலும் பும்ரா, ராகுல் ஆகியோர் காயத்திலிருந்து குணமடைந்து சிறப்பாக செயல்பட்டுள்ளனர். அதனால் 2023 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் மட்டுமல்லாமல் அனைத்து எதிரணிகளுக்கும் சவாலை கொடுக்கும் ஆபத்தான அணியாக இந்தியா மாறியுள்ளதாக சோயப் பக்தர் பாராட்டியுள்ளார்.

வங்கதேசத்திடம் தோல்வியை சந்தித்ததால் நேற்றுவரை இந்தியாவை விமர்சித்து வந்த அவர் தற்போது ஃபைனலில் வென்றதால் யூடார்ன் போட்டு பேசியது பின்வருமாறு. “ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப் முன்னேறியுள்ளது. அணி நிர்வாகம் சிறந்த முடிவுகளை எடுக்கிறது. இருப்பினும் இலங்கையை இப்படி இந்தியா தோற்கடிப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. அதனால் தற்போதிலிருந்து உலகக் கோப்பையில் இந்தியா மிகவும் ஆபத்தான அணியாக இருக்கப்போகிறது”

- Advertisement -

“அதற்காக மற்ற ஆசிய அணிகளை நான் குறைத்து மதிப்பிடவில்லை. மேலும் முகமது சிராஜ் சிறப்பாக பந்து வீசி தன்னுடைய ஆட்டநாயகன் விருது பரிசை மைதான பராமரிப்பாளர்களுக்கு கொடுத்தது மகத்தான செயலாகும். இந்த வெற்றியால் உலகக் கோப்பையில் இந்தியா மிகப்பெரிய தன்னம்பிக்கையுடன் களமிறங்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் ஆரம்பத்தில் இத்தொடரை இந்தியா சற்று தடுமாற்றம் நிறைந்த அணியாகவே இருந்தது”

இதையும் படிங்கஸ்டார் ஸ்போர்ட்ஸ் இல்ல. இந்தியா ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரை எந்த சேனலில் பார்க்கலாம்? – எத்தனை மணிக்கு துவங்கும்?

“ஆனால் தற்போது அவர்கள் பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல உலகின் இதர அணிகளுக்கும் கவலையை ஏற்படுத்தும் அணியாக இருக்கின்றனர். அதனால் தற்போது இந்தியா உலகக் கோப்பையில் தங்களுடைய வருகையை வலுவாக அறிவித்துள்ளது. ஏனெனில் அவர்கள் அனைத்து கட்டங்களையும் நிரப்பியுள்ளனர்” என்று கூறினார். இதைத்தொடர்ந்து வலுவான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement