ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இல்ல. இந்தியா ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரை எந்த சேனலில் பார்க்கலாம்? – எத்தனை மணிக்கு துவங்கும்?

IND-vs-AUS
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அண்மையில் இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடியது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த ஆசிய கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இலங்கை அணியை வீழ்த்திய இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.

அதனை தொடர்ந்து நாடு திரும்பியுள்ள இந்திய அணியானது அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

- Advertisement -

எதிர்வரும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற பலம் வாய்ந்த அணிகள் மோதும் இந்த தொடரானது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் இந்த ஒருநாள் தொடரில் இந்திய அணியை சேர்ந்த முன்னணி வீரர்களும், ஆஸ்திரேலிய முதன்மை அணியும் விளையாட இருப்பதினால் போட்டி மிகவும் பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது எங்கு நடைபெறுகிறது? எந்த சேனலில் பார்க்கலாம்? என்பது குறித்த தெளிவான தகவலை நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டி செப்டம்பர் 22-ஆம் தேதி மொஹாலி மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

- Advertisement -

அதனைத்தொடர்ந்து இரண்டாவது ஒருநாள் போட்டி செப்டம்பர் 24-ஆம் தேதி இந்தூர் மைதானத்திலும், மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது செப்டம்பர் 27-ஆம் தேதி ராஜ்கோட் மைதானத்திலும் நடைபெற உள்ளது. அதேபோன்று இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அனைத்துமே பகலிரவு ஆட்டமாக மதியம் 1:30 மணிக்கு தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : இந்த தங்கத்தை உ.கோ டீம்ல எடுங்கய்யா.. இந்தியாவின் 2 உலக சாதனை வெற்றியில் அதிர்ஷ்ட தேவதையாக சுந்தர்.. ரசிகர்கள் வியப்பு

மேலும் இந்த தொடருக்கான ஒளிபரப்பு உரிமத்தை ஸ்போர்ட்ஸ் 18 நிறுவனம் கைப்பற்றியுள்ளதால் அந்த சேனலிலேயே போட்டியை நேரலையில் பார்க்கலாம். மேலும் ஆன்லைன் மூலமாக காண விரும்புவோர் ஜியோ சினிமா ஆப்பின் மூலம் இந்த இந்தியா ஆஸ்திரேலியா தொடரை கண்டு களிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement