IND vs AUS : ராகுல் – ஜடேஜாவை தாண்டி வெற்றியை பரிசாக்கிய இந்திய பவுலர்கள், ஆஸியை தெறிக்க விட்டு 22 வருட புதிய சாதனை

- Advertisement -

2023 பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வென்று ஜூன் மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற்ற இந்தியா அடுத்ததாக அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் களமிறங்கியுள்ளது. மார்ச் 17ஆம் தேதியன்று மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் கடுமையாக போராடி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்ற அசத்தியுள்ளது.

அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீசிய இந்தியாவின் தரமான பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாத ஆஸ்திரேலியா வெறும் 188 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக மிட்சேல் மார்ஷ் 81 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் தலா 3 விக்கெட்கள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து 189 ரன்களை துரத்திய இந்தியாவும் ஆஸ்திரேலியாவின் துல்லியமான பந்து வீச்சில் இஷான் கிசான் 3, விராட் கோலி 4, சூரியகுமார் யாதவ் 0 என முக்கிய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை ஒற்றை இலக்க ரன்களில் இழந்து 16/3 என தடுமாறியது.

- Advertisement -

பவுலர்களை பாராட்டுங்க:
அதனால் ஏற்பட்ட சரிவை சரிசெய்ய போராடிய சுப்மன் கில் 20 ரன்களிலும் கேப்டன் பாண்டியா 25 ரன்களிலும் அவுட்டானது மேலும் பின்னடைவாக அமைந்தது. அதன் காரணமாக 83/5 என சரிந்த இந்தியாவின் வெற்றி கேள்விக்குறியானதால் ரசிகர்கள் கலக்கமடைந்த போது ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல் – ரவீந்திர ஜடேஜா ஆகியோர் நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தி ஸ்டீவ் ஸ்மித் போட்ட அனைத்து திட்டங்களையும் உடைத்து 6வது விக்கெட்டுக்கு 108 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றி பெற வைத்தனர்.

அதில் ராகுல் 75* (91) ரன்களும் ஜடேஜா 45* (69) ரன்களும் எடுத்ததால் 39.5 ஓவரிலேயே 191/5 ரன்கள் எடுத்து வென்ற இந்தியா சொந்த மண்ணில் தங்களை வலுவான அணி என்பதை நிரூபித்துள்ளது. இந்த வெற்றியை வசமாக்கிய ராகுல் மற்றும் ஜடேஜா ஆகியோரை ஏராளமான ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். ஆனால் பொதுவாகவே பேட்டிங்க்கு சாதகமாக இருக்கக்கூடிய வான்கடே மைதானத்தில் ஆஸ்திரேலியாவை வெறும் 188 ரன்களுக்குள் மடக்கிய இந்திய பவுலர்கள் தான் இந்த வெற்றியின் உண்மையான நாயகர்கள் என்று சொல்லலாம்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக முகமது சிராஜ் வேகத்தில் டிராவிஸ் ஹெட் ஆரம்பத்திலேயே 5 ரன்னில் அவுட்டானதும் 2வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஸ்டீவ் ஸ்மித் 22 ரன்களில் கேப்டன் பாண்டியாவிடம் அவுட்டானார். அந்த நிலையில் மறுபுறும் தொடர்ந்து அதிரடியாக செயல்பட்ட மற்றொரு தொடக்க வீரர் மிட்சேல் மார்ஷ் 3வது விக்கெட்டுக்கு மார்னஸ் லபுஸ்ஷேனுடன் 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 10 பவுண்டரி 5 சிக்ஸருடன் 81 (65) ரன்கள் விளாசி மிரட்டலை கொடுத்தார்.

அப்போது அவரை அவுட்டாக்கிய இந்தியா மார்னஸ் லபுஸ்ஷேன் 15, ஜோஸ் இங்லிஷ் 26, கேமரூன் கிரீன் 12, கிளன் மேக்ஸ்வெல் 8, மார்கஸ் ஸ்டோனிஸ் 5 என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களை ஒற்றை இலக்க ரன்களில் காலி செய்தது. அப்படி ஒரு கட்டத்தில் 19.3 ஓவரில் 129/2 என நல்ல நிலையில் இருந்த ஆஸ்திரேலியாவை 35.4 ஓவரில் 188 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய இந்தியா சார்பில் ஷமி, சிராஜ் தலா 3 விக்கெட்டுகளும் ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்களும் ஹர்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

- Advertisement -

சொல்லப்போனால் இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவை மிகவும் குறைந்த ஓவரில் ஆல் அவுட்டாக்கியுள்ள இந்தியா 22 வருட சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் கடந்த 2001ஆம் ஆண்டு இந்தூரில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியாவை 35.5 ஓவரில் இந்தியா 181 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கியதே முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க: 2023 ஆசிய கோப்பைக்கு முன்பாக வெளிநாட்டில் நடைபெறும் இந்தியாவின் புதிய கிரிக்கெட் தொடர் – அதிகாரபூர்வ அட்டவணை இதோ

அதன் காரணமாகவே சேசிங் செய்யும் போது என்ன தான் விராட் கோலி உள்ளிட்ட டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினாலும் ரன் ரேட் மற்றும் இலக்கு குறைவாக இருந்ததை பயன்படுத்தி ராகுல் மற்றும் ஜடேஜா போராடி வெற்றி பெற வைத்தனர்.

Advertisement