2023 ஆசிய கோப்பைக்கு முன்பாக வெளிநாட்டில் நடைபெறும் இந்தியாவின் புதிய கிரிக்கெட் தொடர் – அதிகாரபூர்வ அட்டவணை இதோ

INDia Hardik pandya
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை கிரிக்கெட் அணிகளில் ஒன்றாக திகழும் இந்தியா தற்சமயத்தில் ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் டி20 அணியாகவும் நம்பர் ஒன் ஒருநாள் அணியாகவும் ஜொலித்து வருகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டிலும் 2வது இடத்தில் இருக்கும் இந்தியா இந்த வருடம் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பை ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றையாவது வென்று 2013க்குப்பின் உலகக் கோப்பை வெல்ல முடியாமல் தவித்து வரும் கதைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் லட்சியத்துடன் விளையாடி வருகிறது. அந்த வரிசையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பையை 2 – 1 (4) என்ற கணக்கில் வென்ற இந்தியா தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை நிரூபித்தது.

அதனால் ஜூன் மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் மீண்டும் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் இந்தியா அடுத்ததாக வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அதைத்தொடர்ந்து நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ள இந்திய அணியினர் அடுத்ததாக வரும் மார்ச் 31 முதல் கோலாகலமாக நடைபெறும் ஐபிஎல் தொடரின் 16வது சீசனில் பல்வேறு அணிகளுக்காக விளையாட உள்ளனர்.

- Advertisement -

புதிய தொடர்:
அது முடிந்ததும் லண்டனில் ஜூன் 7 – 11 வரை வரலாற்றின் 2வது டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் களமிறங்கும் இந்தியா கோப்பையை வெல்ல போராட உள்ளது. அந்த ஃபைனலுக்கு அடுத்தபடியாக ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ்க்கு பயணிக்கும் இந்தியா 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது. இந்நிலையில் அதற்கான அட்டவணை இன்னும் வெளியிடப்படாத நிலையில் அந்த சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு தங்களது நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளதாக அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பிசிசிஐ ஏற்கனவே வெளியிட்ட கால அட்டவணையின் படி வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு அடுத்ததாக 2023 ஆசிய கோப்பையில் விளையாடுவதாக திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அதற்கிடையே வரும் ஆகஸ்ட் 18 – 23 வரை மல்ஹைட் நகரில் தங்களுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாடும் என்று அயர்லாந்து வாரியம் அறிவித்துள்ளது.

- Advertisement -

கடைசியாக கடந்த வருடம் ஜூலை மாதம் அயர்லாந்தை அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்ட ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் இந்திய அணி 2 – 0 (2) என்ற கணக்கில் ஒய்ட் வாஷ் செய்து கோப்பையை வென்றது. அந்த தொடரில் தீபக் ஹூடா சதமும் சஞ்சு சாம்சன் முதல் முறையாக அரை சதமும் அடித்து அசத்தினார்கள். அதே போல் உம்ரான் மாலிக் போன்ற நிறைய இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்ட நிலையில் அயர்லாந்தும் 2 போட்டிகளிலும் இந்தியாவுக்கு கடுமையான சவாலை கொடுத்தது.

எனவே தற்போது நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியாவை மீண்டும் தங்களது மண்ணில் எதிர்கொள்வதில் மகிழ்ச்சியடைவதாக அயர்லாந்து வாரியம் தெரிவித்துள்ளது. அது போக அக்டோபர் மாதம் இந்திய மண்ணில் நடைபெறும் உலக கோப்பைக்கு தகுதி பெறும் வகையில் வங்கதேசத்துக்கு எதிராகவும் சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அயர்லாந்து விளையாட உள்ளது.

இதையும் படிங்க:IND vs AUS : 8 மாதத்திற்கு பிறகு இப்படி நடந்ததில் மகிழ்ச்சி. வெற்றிக்கு பின்னர் ஆட்டநாயகன் – ரவீந்திர ஜடேஜா மகிழ்ச்சி

அதற்கு முன்பாகவே ஜூன் மாதம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் அயர்லாந்து வரும் செப்டம்பர் மாதம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளதாகவும் அறிவித்துள்ளது. இந்த அடுத்தடுத்த அறிவிப்புகள் அயர்லாந்து நாட்டு ரசிகர்களிடம் மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement