IND vs AUS : 8 மாதத்திற்கு பிறகு இப்படி நடந்ததில் மகிழ்ச்சி. வெற்றிக்கு பின்னர் ஆட்டநாயகன் – ரவீந்திர ஜடேஜா மகிழ்ச்சி

Jadeja
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நேற்று மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக பந்துவீச்சில் இரண்டு விக்கெட்டை கைப்பற்றிய ரவீந்திர ஜடேஜா பேட்டிங்கிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து 45 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

Jadeja 1

- Advertisement -

அவரது இந்த சிறப்பான செயல்பாடு காரணமாக ஆட்டநாயகன் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. கடந்த பல மாதங்களாகவே ஒருநாள் கிரிக்கெட்டில் காயம் காரணமாக விளையாடாமல் இருந்த ரவீந்திர ஜடேஜா தற்போது மீண்டும் கம்பேக் கொடுத்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த முதலாவது ஒருநாள் போட்டியில் தனது சிறப்பான செயல்பாடு குறித்து போட்டிக்கு பின்னர் பேசியிருந்த ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா பேசுகையில் கூறியதாவது : கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்கு பிறகு மீண்டும் நான் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ளேன். இப்படி ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு நான் ஒருநாள் போட்டிகளில் விளையாடியதால் வெகு விரைவாகவே இந்த ஒருநாள் கிரிக்கெட்-க்கு ஏற்றார் போன்று என்னை தகவமைத்துக்கொள்ள விரும்பினேன்.

KL Rahul 1

அந்த வகையில் நான் பந்துவீசும் போது மிகச் சிறப்பாக செயல்பட்டு சில விக்கெட்டுகளையும் கைப்பற்றினேன். அதோடு நான் பேட்டிங் செய்ய உள்ளே சென்றபோது நிச்சயம் கே.எல் ராகுலுடன் நல்ல பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டும் என்று நினைத்தேன். இந்த இலக்கு சிறியதாக இருந்தாலும் இதை நாங்கள் சேசிங் செய்தாக வேண்டும் என்பதே எங்களது நோக்கமாக இருந்தது.

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டில் வெவ்வேறு லென்த் இருக்கும் ஆனால் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை பொருத்தவரை அதற்கு ஏற்றார்போல் நாம் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். அந்த வகையில் பந்துவீச்சின் போது சிறப்பான இடத்தில் பந்துவீசியதாக நினைக்கிறன், அதேபோன்று நான் பேட்டிங் செய்யும்போதும் கே.எல் ராகுலுடன் நல்லதொரு பார்ட்னர்ஷிப் அமைத்ததாக நினைக்கிறேன். இந்த சேசிங்கில் நான் களமிறங்கும் போது ராகுலுடன் 70 முதல் 80 ரன்கள் வரை பாட்னர்ஷிப் அமைக்க வேண்டும் என்று நினைத்தேன்.

இதையும் படிங்க : IND vs AUS : வான்கடே பிட்ச்ல இப்படி நடக்கும்னு நாங்க நெனைக்கல. தோல்விக்கு பிறகு – ஸ்டீவ் ஸ்மித் வருத்தம்

அந்த வகையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் நாங்கள் இருவரும் வெற்றிக்கு அழைத்துச் சென்றதில் மகிழ்ச்சி. இந்த போட்டியில் பெரிய ஷாட் விளையாடுவது எளிதல்ல. ஏனெனில் பந்து இந்த மைதானத்தில் ஸ்விங்காகி வந்ததால் பெரிய ஷாட்டுகளுக்கு செல்லாமல் இயல்பான கிரிக்கெட் ஷாட்களையே விளையாட நினைத்தோம் என ரவீந்திர ஜடேஜா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement