IND vs SL : 5 டக் அவுட்.. 50க்கு ஆல் அவுட்.. இலங்கை மோசமான சாதனை.. 23 வருட வரலாற்று அவமானத்துக்கு பழிக்கு பழி தீர்த்த இந்தியா

IND vs SL 1999 50
- Advertisement -

பரபரப்பாக நடைபெற்று வந்த ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் மாபெரும் இறுதிப்போட்டி செப்டம்பர் 17ஆம் தேதி இந்திய நேரடிப்படி மதியம் 3 மணிக்கு இலங்கையில் உள்ள கொழும்பு நகரில் நடைபெற்றது. அதில் லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்திய நடப்பு சாம்பியன் இலங்கையை அதன் சொந்த மண்ணில் முன்னாள் சாம்பியன் இந்தியா எதிர்கொண்டது. அந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்த நிலையில் இந்திய அணியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்டார்.

அதை தொடர்ந்து பேட்டிங்கை துவக்கிய இலங்கைக்கு பும்ரா வீசிய முதல் ஓவரிலேயே குசால் பெரேரா டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். ஆனால் அதை விட 4வது ஓவரை வீசிய முகமது சிராஜ் முதல் பந்திலேயே நிசாங்காவை 2 ரன்களில் அவுட்டாக்கி அடுத்து வந்த சமரவிக்கிரமாவை 1 ரன்னில் அவுட்டாக்கி அதற்கடுத்ததாக வந்த அசலங்காவை டக் அவுட்டாக்கி மிரட்டலை கொடுத்தார்.

- Advertisement -

பழி தீர்த்த இந்தியா:
அதோடு நிற்காமல் கடைசி பந்தில் தனஞ்செயா டீ சில்வாவை 4 ரன்களில் காலி செய்த அவர் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரராக சாதனை படைத்தார். அதுமட்டுமல்லாமல் அதற்கடுத்ததாக வந்த கேப்டன் தசுன் சானாக்காவையும் டக் அவுட்டாக்கிய அவர் 16 பந்துகளில் 5 விக்கெட்களை எடுத்து ஆரம்பத்திலேயே இலங்கையின் கதையை முடித்தார்.

அவரது மிரட்டலால் தாக்கு பிடிக்க முடியாத இலங்கைக்கு அதைத்தொடர்ந்து வந்த பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அதிகபட்சமாக குசால் மெண்டிஸ் 17 ரன்களும் ஹேமந்தா 13* ரன்களும் எடுத்தனர். அப்படி 5 பேட்ஸ்மேன்கள் டக் அவுட்டானதால் 15.2 ஓவரிலேயே இலங்கையை 50 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளும் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

- Advertisement -

இதன் வாயிலாக இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் குறைந்தபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற மோசமான சாதனையை இலங்கை படைத்தது. இதற்கு முன் கடந்த 2014ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக வங்கதேசம் 58 ரன்களில் சுருண்டதே முந்தைய சாதனையாகும். அத்துடன் இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக ஒரு போட்டியில் தன்னுடைய குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து இலங்கை மோசமான சாதனை படைத்தது.

இதையும் படிங்க: IND vs SL : ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை யாருமே படைக்காத இமாலய சாதனையை நிகழ்த்திய – முகமது சிராஜ்

அதை விட கடந்த 2000ஆம் ஆண்டு ஷார்ஜாவில் நடைபெற்ற கோகோகோலா சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் இலங்கையிடம் 54 ரன்களுக்கு சுருண்ட இந்தியா ஒருநாள் கிரிக்கெட்டில் தம்முடைய குறைந்தபட்ச ஸ்கோர் பதிவு செய்து அவமான தோல்வியை சந்தித்தது. அதற்கு 24 வருடங்கள் கழித்து 2023 ஆசிய கோப்பை ஃபைனலில் இலங்கையை சொந்த மண்ணில் பழிக்கு பழி இந்தியா தீர்த்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement