IND vs SL : ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை யாருமே படைக்காத இமாலய சாதனையை நிகழ்த்திய – முகமது சிராஜ்

Mohammed-Siraj
Advertisement

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியானது செப்டம்பர் 17-ஆம் தேதி இன்று கொழும்பு மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டிருந்தது.

இந்நிலையில் இன்று துவங்கிய இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இலங்கை அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி இந்திய அணி முதலில் பந்துவீச களமிறங்கும் முன்னரே மழை பெய்ததால் போட்டி 40 நிமிடங்கள் வரை தாமதமானது. பின்னர் போட்டி துவங்கியதும் முதல் ஓவரிலேயே மூன்றாவது பந்தில் குசால் பெரேராவை ரன் எதுவும் எடுக்காமல் பும்ரா வெளியேற்றி இருந்தார்.

- Advertisement -

இதன் காரணமாக இலங்கை அணி ஒரு ரன்னுக்கே ஒரு விக்கெட்டை இழந்து தடுமாறியது. அதன் பின்னர் நான்காவது ஓவரை வீச வந்த முகமது சிராஜ் அந்த ஓவரில் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய வீரர்களில் யாரும் நிகழ்த்தாத ஒரு அரிதான சாதனையை நிகழ்த்தி அசத்தியதோடு மட்டுமின்றி இலங்கை அணியின் தோல்வியையும் அந்த ஒரு ஓவரிலேயே உறுதி செய்தார்.

ஏனெனில் அந்த ஓவரின் முதல் பந்தில் பதும் நிசங்காவையும், மூன்றாவது பந்தில் சமர விக்ரமாவையும், நான்காவது பந்தில் அசலங்காவையும் கடைசி பந்தில் தனஞ்செயா என நான்கு வீரர்களையும் அவர் ஆட்டம் இழக்க வைத்து வெளியேற்றினார்.

- Advertisement -

இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஒரே ஓவரில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளராக இன்று சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதோடு மட்டுமின்றி போட்டியின் ஆறாவது ஓவரையும் வீசிய முகமது சிராஜ் அந்த ஓவரின் நான்காவது பந்தில் இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகாவை கிளீன் போல்ட் ஆக்கி 16 பந்திலிலேயே 5 விக்கெட்டை வீழ்த்திய முதல் சர்வதேச வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

இதையும் படிங்க : IND vs SL : ஒரு பந்து கூட வீசப்படாமல் இறுதிப்போட்டி நிறுத்தி வைப்பு – நடந்தது என்ன? விவரம் இதோ

அவரது இந்த சிறப்பான பந்துவீச்சின் காரணமாக இலங்கை அணியானது 12 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. நிச்சயம் இந்த போட்டியில் இலங்கை அணியால் 100 ரன்களை எட்டுவது கூட கடினம் தான். அதோடு இந்த போட்டியில் இந்திய அணி எளிதாக வெற்றி பெறுவதும் உறுதி.

Advertisement