IND vs SL : ஒரு பந்து கூட வீசப்படாமல் இறுதிப்போட்டி நிறுத்தி வைப்பு – நடந்தது என்ன? விவரம் இதோ

IND-vs-SL
- Advertisement -

இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த இந்த ஆசியக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இன்று இந்திய அணி இலங்கை அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. இந்த தொடர் ஆரம்பித்தது முதலே மழையின் குறுக்கீடு அதிகமாக இருந்த வருகிறது.

அதிலும் குறிப்பாக ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் போட்டியும் மழையால் பாதிக்கப்பட்டதால் எப்படியோ ஒருவழியாக ரிசர்வ் டேவில் போட்டி நடைபெற்று முடிந்தது.

- Advertisement -

இந்நிலையில் இன்று செப்டம்பர் 17-ஆம் தேதி கொழும்பு மைதானத்தில் துவங்கிய இறுதிப் போட்டியிலும் மழை இருக்கும் என்று ஏற்கனவே வானிலை அறிக்கை வெளியாகி இருந்த வேளையில் டாஸ் போடப்பட்ட சிறிது நேரத்திலேயே மீண்டும் மழை தன் வேலையை காட்டியது.

இதன் காரணமாக இந்த இறுதிப்போட்டியானது ஒரு பந்து கூட வீசப்படாமல் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் விட்டு விட்டு மழை பெய்யும் என்று வானிலை அறிக்கை தெரிவித்துள்ளதால் நிச்சயம் போட்டி அவ்வப்போது நின்று நின்று நடைபெறும் என்று தெரிகிறது.

- Advertisement -

தற்போது முதல் ஒரு பந்து கூட வீசப்படாத இருக்கும் வேளையில் 3.45 மணிக்கு போட்டி துவங்கலாம் என்று கூறப்படுகிறது. ஒரு வேலை அப்படி தொடங்கினாலும் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இப்படி மழையின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இன்று இந்த இறுதிப்போட்டி முழுவதுமாக நடைபெறுமா? என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : அவர் இல்லைனா ஒன்னுமில்ல.. முதல் மேட்ச்லயே மழை வந்ததால் தப்பிச்சுட்டாங்க – பாக் அணியின் பலவீனத்தை உடைத்த கவாஸ்கர்

ஒரு வேளையில் மழையால் இன்று போட்டியினை நடத்த முடியாமல் போனால் நாளைய ரிசர்வ் டேவில் போட்டி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement