IND vs WI : வெ.இ சாய்த்து பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி இந்த உலகசாதனையை இந்தியா படைக்குமா – முழுவிவரம்

IND vs WI Shikhar Dhawan Nicholas Pooran
- Advertisement -

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூலை 22-ஆம் தேதியான இன்று துவங்கியது. இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ரிஷப் பண்ட் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஓய்வெடுக்கும் நிலையில் மற்றொரு நட்சத்திர மூத்த வீரர் ஷிகர் தவான் தலைமையில் பெரும்பாலும் இளம் வீரர்களுடன் இந்தியா களமிறங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு போர்ட் ஆப் ஸ்பெய்ன் நகரில் இருக்கும் குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.

INDvsWI

- Advertisement -

இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லை என்றாலும் சமீபத்தில் வலுவான இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் சாய்த்த மிகப்பெரிய புத்துணர்ச்சியுடன் இந்தியா களமிறங்குகிறது. மேலும் ஷிகர் தவான் தலைமையில் சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில், ஷ்ரேயஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், சஹால், சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா, அர்ஷிதீப் சிங் என தேவையான அளவு அனுபவமும் இளமையும் கலந்த நல்ல பார்மில் இருக்கும் வீரர்கள் இந்திய அணியில் நிறைந்துள்ளார்கள். எனவே தற்போது உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியை அதன் சொந்த மண்ணில் சாய்க்கும் அளவுக்கு தரமான வீரர்களை கொண்டுள்ள இந்தியா இந்தத் தொடரை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பலவீனமான விண்டிஸ்:
ஏனெனில் என்னதான் சொந்த மண்ணில் விளையாடினாலும் சமீபத்தில் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்ட நிக்கோலஸ் பூரன் தலைமையில் ஜேசன் ஹோல்டர், ரோவ்மன் போவல், ஷை ஹோப் என குறைந்தளவு தரமான வீரர்கள் மட்டுமே வெஸ்ட் இண்டீஸ் அணியில் காணப்படுகிறார்கள். போதாக்குறைக்கு கடந்த வாரம் கத்துக்குட்டியான வங்கதேசத்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் சுமாராக செயல்பட்ட அந்த அணி 3 – 0 என்ற கணக்கில் படுமோசமான ஒயிட்வாஷ் தோல்வியை சந்தித்தது.

INDvsWI

எனவே தற்போதுள்ள இந்திய அணியுடன் ஒப்பிடும் போது கண்டிப்பாக வெஸ்ட் இண்டீஸ் சொந்த மண்ணாக இருந்தாலும் சற்று பலவீனமான அணியாகவே தென்படுகிறது. இருப்பினும் சொந்த மண்ணில் திடீரென்று பூனையும் புலியாகலாம் என்ற வகையில் முடிந்த அளவுக்கு மிகச் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவை தோற்கடித்து சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் தலைநிமிர்வதற்கு வெஸ்ட் இண்டீஸ் இந்த தொடரில் போராட தயாராகியுள்ளது.

- Advertisement -

பலமான இந்தியா:
1. இருப்பினும் எப்போதும் வெஸ்ட் இண்டீசை விட சிறப்பாக செயல்பட்டுள்ள இந்தியா வரலாற்றில் வலுவான அணியாகவே திகழ்ந்து வருகிறது. குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை 136 போட்டிகளில் அந்த அணியை எதிர்கொண்டுள்ள இந்தியா அதில் 68 வெற்றிகளை பெற்றுள்ளது, வெஸ்ட்இண்டீஸ் 63 வெற்றிகளை பெற்றது.

indvswi

2. அதிலும் குறிப்பாக இந்த ஒருநாள் தொடரின் 3 போட்டிகளுமே போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் இருக்கும் குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த மைதானத்தில் வரலாற்றில் 16 போட்டிகளில் வெஸ்ட் இண்டீசை எதிர்கொண்ட இந்தியா 8 போட்டிகளில் வென்றுள்ளது, 7 போட்டிகளில் தோற்றுள்ளது.

- Advertisement -

3. அதைவிட ஒருநாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக கடந்த 2006க்குப்பின் ஒருநாள் தொடரில் இந்தியா தோல்வியடைந்ததே கிடையாது.

INDvsWI

4. கடைசியாக கடந்த 2006இல் பிரைன் லாரா தலைமையிலான வெஸ்ட் இண்டீசை அதன் சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்ற ராகுல் டிராவிட் தலைமையிலான இந்தியா 4 – 1 என்ற கணக்கில் தோற்றிருந்தது.

- Advertisement -

5. அதன்பின் கடந்த 14 வருடங்களில் வெஸ்ட் இண்டீஸ் மண்ணிலும் இந்திய மண்ணிலும் நடைபெற்ற 11 ஒருநாள் தொடர்களில் தோல்வியே அடையாமல் தொடர்ச்சியாக இந்தியா வென்று வெற்றி நடை போட்டு வருகிறது.

INDvsWI

உலகசாதனை படைக்குமா:
1. அந்த நிலைமையில் தற்போது நடைபெறும் இந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கோப்பையையும் வெல்லும் பட்சத்தில் “ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக தொடர்ச்சியாக தோல்வியே அடையாமல் அதிக தொடர்களை வென்ற அணி” என்ற புதிய உலக சாதனையை இந்தியா படைக்கும்.

2. கத்துக்குட்டியான ஜிம்பாப்வேக்கு எதிராக கடைசியாக பங்கேற்ற 11 ஒருநாள் தொடர்களிலும் தொடர்ச்சியாக தோல்வியடையாமல் வென்று வரும் பாகிஸ்தானுடன் தற்போது வரை அந்த உலக சாதனையை இந்தியா பகிர்ந்து கொண்டு வருகிறது.

இதையும் படிங்க : IND vs WI : விராட் கோலி எங்களுடன் விளையாடமல் ஓய்வெடுப்பது வருத்தமா இருக்கு – நெகிழும் வெ.இ கோச்

3. எனவே இந்த தொடரில் வென்றால் பாகிஸ்தானை முந்தி அந்த உலக சாதனையை முழுமையாக தனது பெயரில் இந்தியா வசமாக்கி புதிய சரித்திரம் படைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement