IND vs WI : விராட் கோலி எங்களுடன் விளையாடமல் ஓய்வெடுப்பது வருத்தமா இருக்கு – நெகிழும் வெ.இ கோச்

Simmons
- Advertisement -

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர வீரர் விராட் கோலி கடந்த 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக தினம்தோறும் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். கடைசியாக கடந்த 2019இல் சதமடித்திருந்த அவர் அதன்பின் டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் என எந்த வகையான கிரிக்கெட்டிலும் 100 இன்னிங்ஸ்களுக்கு மேலாக அடுத்த சதத்தை அடிக்காமல் தவித்து வருகிறார். இதிலிருந்து விடுபடுவதற்காக பேட்டிங்கை பாதித்த கேப்டன்ஷிப் பொறுப்புகளை படிப்படியாக ராஜினாமா செய்து சாதாரண வீரராக விளையாடத் தொடங்கிய அவர் விரைவில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஐபிஎல் 2022 தொடரில் 3 கோல்டன் டக் அவுட்டானது, கடைசி 5 ஒருநாள் போட்டிகளில் 20 ரன்களை கூட தாண்டாதது என முன்பை விட சுமாராக செயல்படுவதால் பொறுமையிழந்த அனைவரும் அணியிலிருந்து நீக்குமாறு கேட்க தொடங்கியுள்ளனர். இருப்பினும் ஏற்கனவே 20000+ ரன்களையும் 70 சதமடித்துள்ள அவருக்கு கெவின் பீட்டர்சன் உட்பட நிறைய முன்னாள் வீரர்கள் ஆதரவும் கொடுத்து வருகிறார்கள்.

- Advertisement -

மேலும் இதிலிருந்து விடுபடுவதற்காக சில மாதங்கள் ஓய்வெடுத்து புத்துணர்ச்சியுடன் பார்முக்கு திரும்புமாறு ரவி சாஸ்திரி போன்ற முன்னாள் வீரர்கள் வழங்கிய ஆலோசனைகளை பின்பற்றாத அவர் விளையாடினால் தானே பார்முக்கு திரும்ப முடியும் என்று பதிலளித்தார். ஆனால் தொடர்ச்சியாகவும் விளையாடாமல் இங்கிலாந்து தொடரில் மட்டும் விளையாடிவிட்டு அடுத்ததாக நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓய்வெடுக்கிறார்.

வெஸ்ட்இண்டீஸ் நாயகன்:
இருப்பினும் டி20 உலக கோப்பையில் விராட் கோலி விளையாடுகிறார் என்றால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓய்வெடுக்காமல் விளையாடியிருக்க வேண்டும் என்று திலிப் வெங்சர்க்கார் உட்பட ஒருசில முன்னாள் வீரர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். ஏனெனில் டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டை விட ஒருநாள் கிரிக்கெட்டில் தான் விராட் கோலி அதிக ரன்களையும் சதங்களும் அடித்துள்ளார். எனவே ஒருநாள் கிரிக்கெட் அவருக்கு மிகவும் பிடித்தது என்றால் வெஸ்ட் இண்டீஸ் கொள்ளைப் பிரியம் என்று கூறலாம்.

- Advertisement -

ஏனெனில் வரலாற்றில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேனாக உலக அளவில் விராட் கோலி (2261 ரன்கள்) முதலிடத்தில் உள்ளார். 2-வது இடம் ஜாவேத் மியாண்டட் : 1930 ரன்கள். மேலும் 9 சதங்களுடன் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மேனாகவும் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். அவரைத் தவிர உலகில் வேறு எந்த வீரரும் 6 சதங்கள் கூட அடித்தது கிடையாது.

அத்துடன் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அந்த அணிக்கு எதிராக அதிக ரன்கள் (790) மற்றும் சதங்கள் அடித்த பேட்ஸ்மேன்னாகவும் விராட் கோலி (4) தான் முதலிடத்தில் உள்ளார். மற்ற அனைத்து இந்திய பேட்ஸ்மேன்களும் சேர்த்து 4 சதங்கள் தான் அடித்துள்ளனர். இன்னும் சொல்ல வேண்டுமெனில் இந்த தொடர் நடைபெறும் குயின்ஸ் பார்க் மைதானத்தில் அதிக ரன்கள் (571) மற்றும் சதங்கள் (3) அடித்த இந்திய வீரராகவும் அவரே முதலிடத்தில் உள்ளார். மேலும் கடைசியாக அந்த மைதானத்தில் நடந்த 2 போட்டிகளில் (120, 114* – 2019இல்) என அடுத்தடுத்த சதங்களை அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்துள்ளார்.

- Advertisement -

வருத்தமா இருக்கு:
அதுபோக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் 2 ஒருநாள் தொடர்களை வென்ற ஒரே இந்திய கேப்டன் (2017, 2019) என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இந்நிலையில் வரலாற்றில் தங்களது அணிக்கு எதிராக இந்த அளவுக்கு தரமாக விளையாடிய விராட் கோலி இம்முறை விளையாடாதது மிகவும் வருத்தமளிப்பதாக வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் மற்றும் முன்னாள் ஜாம்பவான் வீரர் பில் சிம்மன்ஸ் தெரிவித்துள்ளார். இதுபற்றி இந்த தொடருக்கு முன்பாக அவர் பேசியது பின்வருமாறு.

“விராட் கோலி போன்ற முக்கிய வீரர்கள் இந்திய அணியில் இல்லாதது எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. ஏனெனில் நீங்கள் எப்போதும் தரமான வீரர்களுக்கு எதிராக தான் விளையாட விரும்புவீர்கள். அந்த வகையில் விராட் கோலி வரலாற்றின் மிகச்சிறந்த வீரர் என்பதை அவரின் சாதனைகளும் புள்ளிவிவரங்களும் பேசுகின்றன. அதனால் விராட் கோலி எங்களுக்கு எதிராக விளையாடுவது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது.

- Advertisement -

அவர் இங்கே விளையாடியிருந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். எங்களது வீரர்களும் அதுபோன்ற தரமான ஒருவரை எதிர்கொள்ள மகிழ்ச்சியடைவார்கள்” என்று கூறினார். தற்போது கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ள விராட் கோலிக்கு ஆதரவளித்து அவர் மேலும் பேசியது பின்வருமாறு :

இதையும் படிங்க : பார்முக்கு திரும்ப சச்சினின் அந்த டெக்னிக்கை பின்பற்றுவதே ஒரு வழி – கோலிக்கு முன்னாள் கேப்டன் வைத்த கோரிக்கை

“விமர்சனங்கள் எங்கேயும் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். அனைவரும் அவர் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் ஒருவரால் அனைத்து நேரங்களிலும் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டே இருக்க முடியாது” என்று கூறினார்.

Advertisement