IND vs WI : வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பதில் தாமதம் ஏன் தெரியுமா? – இவர்தான் புதிய கேப்டனாம்

IND
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அடுத்ததாக ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் என மிகப் பெரிய தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடரானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

INDvsWI

- Advertisement -

அதோடு இந்த சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளை அறிவித்த இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ இன்னும் டி20 தொடருக்கான இந்திய அணியின் வீரர்களை அறிவிக்காமல் உள்ளது. இந்த விடயம் தான் தற்போது அனைவரது மத்தியிலும் கேள்வியை எழுப்பியுள்ளது.

ஏனெனில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளை வெளியிட்ட பி.சி.சி.ஐ ஏன் டி20 அணியை அறிவிப்பதில் மட்டும் தாமதம் காட்டுகிறது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு காரணம் யாதெனில் : ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் விளையாடும் சீனியர் வீரர்களுக்கு டி20 தொடரில் ஓய்வு அளிக்கப்படவுள்ளதாக தெரிகிறது.

Hardik Pandya

அப்படி சீனியர் வீரர்களுக்கு முற்றிலுமாக ஓய்வு அளிக்கப்பட்டு டி20 தொடரில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட அணியே இந்த டி20 தொடரில் விளையாடும் என்பதனால் இந்த டி20 தொடருக்கான தேர்வில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : அறிமுக போட்டியின் முதல் பந்திலேயே அவுட் ஆனேன். அப்போ தோனி என்கிட்ட என்ன சொன்னாரு தெரியுமா? – சுரேஷ் ரெய்னா பேட்டி

அதோடு ஹார்டிக் பாண்டியா தலைமையிலான அந்த அணியில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது. அதன் காரணமாக இந்த டி20 தொடருக்கான அணி முற்றிலும் இளம் வீரர்களைக் கொண்ட புதுமையான அணியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement