அறிமுக போட்டியின் முதல் பந்திலேயே அவுட் ஆனேன். அப்போ தோனி என்கிட்ட என்ன சொன்னாரு தெரியுமா? – சுரேஷ் ரெய்னா பேட்டி

Raina
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா கடந்த 2005-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி 2018 வரை 18 டெஸ்ட் போட்டிகள், 226 ஒருநாள் போட்டிகள் மற்றும் 78 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதுமட்டும் இன்றி கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் 21-வது ஆண்டு வரை ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அவர் 205 போட்டிகளிலும் விளையாடி உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று வகையான வடிவத்திலும் சதம் அடித்த மிகச்சிறந்த வீரரான சுரேஷ் ரெய்னா பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்தையுமே சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்.

Suresh Raina MS Dhoni

- Advertisement -

அதிலும் குறிப்பாக தோனியின் தலைமையின் கீழ் அவரது செயல்பாடு உச்சத்தில் இருந்ததை நாம் பார்த்துள்ளோம். இந்நிலையில் தான் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானபோது என்ன நடந்தது? என்பது குறித்த சில சுவாரஸ்யமான தகவலை அவர் தற்போது ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் : நான் 2005 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது அறிமுகமாகினேன். அந்த போட்டியின் முதல் பந்தியிலேயே முரளிதரனிடம் நான் ஆட்டம் இழந்தேன். அப்போது பெவிலியனை நோக்கி நடக்க தொடங்கிய நான் இன்னொரு வாய்ப்பு கிடைக்குமா? என்று யோசித்துக் கொண்டே வருத்தத்துடன் வெளியேறினேன்.

Raina 1

ஆனாலும் அந்த இன்னிங்ஸ் முடிந்த பிறகு தோனி, இர்ஃபான் பதான், ராகுல் டிராவிட் ஆகியோர் என்னிடம் வந்து இதற்காக வருத்தப்பட வேண்டாம் என்று கூறினார்கள். அதிலும் குறிப்பாக தோனி என்னிடம் வந்து : பேட்டிங் முடிந்து விட்டது. அதனால் அதைப் பற்றி எதுவும் யோசிக்காதே.

- Advertisement -

தற்போது நீ பில்டிங்கில் கவனம் செய்து ஏதாவது செய் நிச்சயம் உனக்கு நம்பிக்கை பிறக்கும் என்று என்னிடம் தெரிவித்து சென்றார். அவர் கூறியபடியே அந்த போட்டியில் நான் அட்டப்பட்டுவை ரன் அவுட் செய்தேன். அப்போதுதான் எனக்கு மீண்டும் இந்திய அணியில் விளையாட தகுதி இருக்கிறது என்பதை நானே உணர்ந்து கொண்டு சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தினேன் என ரெய்னா கூறினார்.

இதையும் படிங்க : அடுத்ததா சிட்னியில் எப்போ கிளையை திறப்பிங்க? சுரேஷ் ரெய்னாவிடம் ஸ்பெஷல் கோரிக்கை – வைத்த ஷேன் வாட்சன்

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : நான் இந்திய அணியில் விளையாடிய போது சச்சின் ஓய்வறையில் இருந்தது எங்கள் அணிக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்தது. அதேபோன்று நான் என்னுடைய கிரிக்கெட் கரியரின் ஆரம்ப கட்டத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் விளையாடினேன். அந்த வாய்ப்பு என்னுடைய பேட்டிங் திறனை வெளிக்காட்ட உதவியது என்று சுரேஷ் ரெய்னா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement