வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று ஜூலை 12-ஆம் தேதி டோமினிக்கோ நகரில் துவங்குகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் ஏகப்பட்ட மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் ஏற்கனவே கடந்த மாதம் இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணி இம்முறை சீனியர் வீரர்களை வெளியேற்றிவிட்டு பல இளம் வீரர்களை அணிக்குள் கொண்டு வந்துள்ளதால் நிச்சயம் இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு அடுத்த 2023 முதல் 2025 ஆம் ஆண்டுக்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான போட்டிகளில் இந்த தொடர் இந்திய அணிக்கு முதலாவது தொடராக இருப்பதினால் இந்த தொடரில் இருந்தே தங்களது வெற்றி கணக்கை ஆரம்பிக்க இந்திய அணி காத்திருக்கிறது.
இந்நிலையில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை எந்த தொலைக்காட்சியில் பார்க்கலாம்? என்பது குறித்த தகவலையும், இந்திய நேரப்படி போட்டி எத்தனை மணிக்கு துவங்கும் என்பது குறித்து தெளிவான தகவலையும் நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கி உள்ளோம்.
அதன்படி இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இந்த முதலாவது டெஸ்ட் போட்டியானது ஜூலை 12-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை டோமினிக்கா நகரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியானது இந்திய நேரப்படி இரவு 7:30(pm) மணிக்கு துவங்கும். அதே போன்று இந்த டெஸ்ட் தொடரினை வழக்கமாக பார்க்கும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பார்க்க முடியாது.
இதையும் படிங்க : IND vs WI : இன்று இந்தியாவின் துணை கேப்டன் கேப்டனா இருக்கேன்னா அதுக்கு அவங்க தான் காரணம் – ரகானே நன்றியுடன் பேட்டி
இம்முறை வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் போட்டிகள் நடைபெற இருப்பதினால் டிடி ஸ்போர்ட்ஸ் சேனல் இந்த தொடரினை நேரடியாக ஒளிபரப்பு செய்ய இருக்கிறது. அதோடு ஆன்லைன் மூலம் போட்டிகளை காண விரும்புவோர் “ஜியோ சினிமா” மற்றும் ஃபேன்கோடு ஆகிய செயலிகள் மூலம் தொடரை கண்டு களிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.