IND vs WI : இன்று இந்தியாவின் துணை கேப்டன் கேப்டனா இருக்கேன்னா அதுக்கு அவங்க தான் காரணம் – ரகானே நன்றியுடன் பேட்டி

rahane
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்கும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஜூலை 12ஆம் தேதி டாமினிக்கா நகரில் துவங்குகிறது. 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அந்த தொடரில் ஜெய்ஸ்வால், ருதுராஜ், முகேஷ் குமார் போன்ற இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அஜிங்கிய ரகானே துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். மும்பையைச் சேர்ந்த அவர் கடந்த 2011இல் தோனி தலைமையில் அறிமுகமாகி ஆரம்ப காலங்களில் 3 வகையான அணியிலும் இடம் பிடித்து 2015 உலகக் கோப்பையில் முதன்மை வீரராக விளையாடினார்.

Rahane 1

- Advertisement -

ஆனாலும் அதன் பின் மெதுவாக விளையாடிய அவர் ஐபிஎல் தொடரிலும் தடுமாறியதால் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பை இழந்த போதிலும் டெஸ்ட் அணியில் தொடர்ந்து மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடி துணை கேப்டனாக செயல்பட்டு வந்தார். குறிப்பாக 2020/21 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் 36க்கு ஆல் அவுட்டாகி சரித்திரத் தோல்வியை சந்தித்த இந்தியாவுக்கு நாடு திரும்பிய விராட் கோலியின் இடத்தில் கேப்டனாக பொறுப்பேற்று 2வது போட்டியில் சதமடித்த அவர் அடுத்தடுத்த போட்டிகளில் அஸ்வின், பும்ரா போன்ற காயத்தால் வெளியேறிய முக்கிய வீரர்களுக்கு பதில் நடராஜன், வாஷிங்டன் சுந்தர் போன்ற இளம் வீரர்களை வைத்தே காபா கோட்டையை தகர்த்து ஆஸ்திரேலியா மண்ணில் 2 – 1 (4) என்ற கணக்கில் வரலாற்று வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

ரகானே நெகிழ்ச்சி:
இருப்பினும் அதன் பின் சதமடிக்காமல் தடுமாறியதால் கடந்த 2022 பிப்ரவரியில் கழற்றி விடப்பட்ட அவருடைய கேரியர் முடிந்ததாகவே பார்க்கப்பட்டது. ஆனாலும் மனம் தளராமல் ரஞ்சிக் கோப்பையில் இரட்டை சதமடித்து போராடிய அவர் ஐபிஎல் 2023 தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணியில் யாருமே எதிர்பாராத வகையில் சரவெடியாக விளையாடி பழைய ஃபார்முக்கு திரும்பி 5வது கோப்பையை வெல்வதற்கு உதவினார்.

அதன் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் தேர்வான அவர் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்றவர்கள் சொதப்பிய போது 89 ரன்கள் அடித்து குறைந்தபட்சம் இந்தியாவை இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து காப்பாற்றினார் என்றே சொல்லலாம். அதன் காரணமாக இந்த தொடரிலும் துணை கேப்டனாக தேர்வாகியுள்ள அவர் இழந்த தன்னுடைய இடத்தையும் கௌரவத்தையும் மீட்டெடுக்க சென்னை அணியில் விளையாடியது பெரிய உதவியாக இருந்ததாக நன்றி மறவாமல் பேசியுள்ளார்.

- Advertisement -

குறிப்பாக ஐபிஎல் தொடரில் கடந்த காலங்களில் விளையாடிய போது நங்கூரமாக நின்று விளையாடுமாறு மற்ற அணிகள் சொன்னதாக தெரிவிக்கும் ரகானே சென்னை மட்டுமே எதைப் பற்றியும் கவலைப்படாமல் சுதந்திரமாக விளையாடும் உரிமையையும் வாய்ப்பையும் கொடுத்ததாக கூறியுள்ளார். அதுவே ஃபார்மை மீட்டெடுத்து கம்பேக் கொடுக்க உதவியதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பிசிசிஐ இணையத்தில் பேசியது பின்வருமாறு.

Ajinkya Rahane WTC Final

“தற்போதும் என்னிடம் எந்த மாற்றமும் இல்லை. இருப்பினும் சென்னை சூப்பர் கிங்ஸ் எனக்கு முழுவதுமான சுதந்திரம் கொடுத்தது. குறிப்பாக இதற்கு முன் நான் விளையாடிய ஐபிஎல் அணி நிர்வாகங்கள் விக்கெட்டுகள் விழாத வகையில் நங்கூரமாக பேட்டிங் செய்யுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் சென்னை அணியில் தான் களமிறங்கியது முதலே அதிரடியாக விளையாடுவதற்கான உரிமையை எனக்கு கொடுத்தனர்”

- Advertisement -

“அந்த வகையில் எனக்கு கொடுக்கப்பட்ட வேலை தான் மாறியதே தவிர நான் எப்போதும் போலவே இருக்கிறேன். மேலும் எனக்கு எந்த வகையான வேலை கொடுத்தாலும் அதை நான் முழுவதுமாக செய்து முடிப்பதற்கு முயற்சிக்கிறேன். சொல்லப்போனால் 4 – 5 வருடங்கள் ஏற்கனவே நான் துணைக் கேப்டனாக செயல்பட்டுள்ளேன். எனவே அதே பதவியில் இந்திய அணியில் மீண்டும் நான் செயல்படுவதற்கு மகிழ்ச்சியடைகிறேன்”

Ajinkya Rahane

இதையும் படிங்க:IND vs WI : ஒன்னு இல்ல.. ரெண்டு இல்ல.. மூனு பேர் இன்று அறிமுகமாக வாய்ப்பு – இந்திய அணியில் ஏற்படவுள்ள மாற்றம்

“அத்துடன் ரோகித் சர்மா தலைமையில் நான் விளையாடுவதை மகிழ்ச்சியாக கருதுகிறேன். குறிப்பாக 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் முதல் முறையாக அவரது தலைமையில் விளையாடிய எனக்கும் மற்ற வீரர்களுக்கும் முழுமையான சுதந்திரத்தை கொடுக்கிறார். அது தான் ஒரு நல்ல கேப்டனுக்கான அடையாளமாகும். எனவே இப்போதும் ரோகித் சர்மா எனக்கும் கொடுக்கும் வேலைகளை செய்து முடிக்க நான் தயாராக இருக்கிறேன்” என்று கூறினார்.

Advertisement