IND vs WI : ஒன்னு இல்ல.. ரெண்டு இல்ல.. மூனு பேர் இன்று அறிமுகமாக வாய்ப்பு – இந்திய அணியில் ஏற்படவுள்ள மாற்றம்

IND
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது ஜூலை 12-ஆம் தேதி இன்று இரவு டோமினிக்கா நகரில் துவங்க இருக்கிறது. இந்த டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு வெஸ்ட் இண்டீஸ் சென்றடைந்த நிலையில் தற்போது பயிற்சிகளை முடித்துக் கொண்டு போட்டியில் பங்கேற்க தயாராகியுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற இருக்கும் இந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் பல மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Ishan Kishan and Gill

- Advertisement -

ஏனெனில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து சீனியர் வீரர்கள் அணியிலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டு அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே இன்றைய போட்டியில் பல மாற்றங்கள் அணியில் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இன்றைய முதலாவது டெஸ்ட் போட்டியில் மூன்று வீரர்களுக்கு அறிமுக வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ஏற்கனவே ரோகித் சர்மா துவக்க வீரராக ஜெய்ஸ்வால் களமிறங்குவார் என்று உறுதி செய்துள்ளதால் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் துவக்க வீரராக அறிமுகமாவார்.

Mukesh-Kumar

அதேபோன்று இரண்டாவதாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எஸ் பரத் தனக்கு கிடைத்த ஐந்து வாய்ப்புகளிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவருக்கு பதிலாக இஷான் கிஷனை பின் வரிசையில் இடது கை பேட்ஸ்மேனாக சோதிக்க அவரையும் அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளது. அதேபோன்று மூன்றாவதாக வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் அறிமுகமாக அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

- Advertisement -

ஏனெனில் ஏற்கனவே முகமது ஷமிக்கு இந்த தொடரில் ஓய்வு வழங்கப்பட்டதால் முகமது சிராஜ் இந்த தொடரில் வேகப்பந்து வீச்சை வழிநடத்துவார். அதேபோன்று அவருக்கு உறுதுணையாக ஷர்துல் தாகூரும் கட்டாயம் விளையாடுவார் என்பதனால் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளருக்கான இடத்தில் சைனி, முகேஷ் குமார் மற்றும் ஜெய்தேவ் உனட்கட் ஆகியோர் போட்டியில் உள்ளனர்.

இதையும் படிங்க : அவர் மாஸ்டர் மைண்டுக்குள் அப்டி என்ன தான் ஓடும்னு நினைப்பேன் – தன்னுடைய ஜூனியர் தோனி பற்றி டிராவிட் பேசியது என்ன?

இருந்தாலும் முகேஷ் குமார் உள்ளூர் தொடர்களில் 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசி பந்தினை இருபுறமும் ஸ்விங் செய்து அசத்தி விக்கெட்டுகளை வீழ்த்தி நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளதால் நிச்சயம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த மைதானத்தில் அவருக்கும் அறிமுக வாய்ப்பு கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் இன்றைய போட்டியில் மூன்று வீரர்கள் அறிமுகமாக பிரகாசமான வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement