அவர் மாஸ்டர் மைண்டுக்குள் அப்டி என்ன தான் ஓடும்னு நினைப்பேன் – தன்னுடைய ஜூனியர் தோனி பற்றி டிராவிட் பேசியது என்ன?

Rahul Dravid
- Advertisement -

நட்சத்திர முன்னாள் இந்திய வீரர் எம்எஸ் தோனி வரலாறு கண்ட மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக போற்றப்படுகிறார். ஏனெனில் கிரிக்கெட் மிகவும் பிரபலமில்லாத ராஞ்சியில் பிறந்து கிரிக்கெட்டின் மீதான காதலால் ரயில்வே டிக்கெட் கலெக்டர் வேலையை விட்டு உள்ளூர் போட்டிகளில் விளையாடிய அவர் அதிரடியாக செயல்பட்டு கடந்த 2004இல் இந்தியாவுக்காக அறிமுகமாகி விக்கெட் கீப்பர்களின் அடிப்படை இலக்கணத்தை மாற்றி 2007இல் கேப்டனாகவும் பொறுப்பேற்றார். குறிப்பாக உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவமில்லாத போதிலும் அனைத்து வீரர்களையும் சிறப்பாக வழி நடத்தி அழுத்தமான நேரத்தில் வித்தியாசமான முடிவுகளை எடுத்த அவர் 2007 டி20 உலக கோப்பையை வென்று 2010இல் இந்தியாவை தர வரிசையில் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாகவும் முன்னேற்றினார்.

Dhoni

- Advertisement -

அதே போல் கங்குலி உருவாக்கிய வீரர்களை வைத்து 2011 உலக கோப்பையை சொந்த மண்ணில் 28 வருடங்கள் கழித்து வென்று காட்டிய அவர் தாம் உருவாக்கிய விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா போன்ற இளம் வீரர்களை வைத்து 2013 சாம்பியன்ஸ் டிராபியை வென்று உலகிலேயே 3 விதமான வெள்ளைப்பந்து ஐசிசி கோப்பைகளை வென்ற முதல் கேப்டனாக சாதனை படைத்தார். மேலும் மிடில் ஆர்டரில் நங்கூரமாக நின்று நிறைய போட்டிகளில் வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அவர் மிகச்சிறந்த ஃபினிஷராகவும் பல இளம் வீரர்களுக்கு ரோல் மாடலாகவும் திகழ்கிறார்.

டிராவிட் பாராட்டு:
அப்படி பன்முகங்களைக் கொண்ட தோனியிடம் அழுத்தமான நேரங்களிலும் தவறாமல் கூலாக செயல்படும் கேப்டன்ஷிப் மிகவும் புகழ் பெற்றதாகும். குறிப்பாக விக்கெட் கீப்பராக இருப்பதால் பேட்ஸ்மேன்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை முன்கூட்டியே கணித்து அதற்கேற்றார் போல் ஃபீல்டிங் செட்டிங் செய்து அவுட்டாக்கும் தன்மையைக் கொண்ட அவர் 2010 ஐபிஎல் ஃபைனலில் மிரட்டலை கொடுத்த பொல்லார்ட்டை நேராக ஃபீல்டரை நிற்க வைத்து அவுட்டாக்கியது காலத்திற்கும் மறக்க முடியாத வகையில் அமைந்தது.

MS DHoni Rahul Dravid CSK vs RR

இந்நிலையில் அழுத்தமான நேரங்களில் எதிரணி வீரர்கள் மனதிற்குள் என்ன நினைக்கிறார்கள் என்பதை படித்து அதற்கேற்றார் போல் தோனியால் எப்படி செயல்பட முடிகிறது என்பதை பற்றி ஜாம்பவான் ராகுல் டிராவிட் விவரித்து பேசியுள்ளார். இது பற்றி பிரபல யூட்யூப் நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “சொல்லலாப்போனால் நானே அவருடைய மனம் எப்படி வேலை செய்கிறது என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். நாம் இந்த விளையாட்டின் டெக்னிக் மற்றும் நுணுக்கங்களில் இருக்கும் விரிசல்களை நாம் உடைத்துள்ளோம்”

- Advertisement -

“இருப்பினும் எப்போதுமே டெக்னிக் என்பது எப்போதுமே மாறி முன்னேறிக் கொண்டிருக்கிறது. விளையாட்டு வீரர்கள், உடற்பயிற்சியாளர்கள், பயிற்சியாளர்கள், விளையாட்டு அறிவியல், மருந்துகள் போன்ற அனைத்துமே முன்னேற்றத்தை நோக்கி செல்கின்றன. ஆனால் நீங்கள் எப்போதும் மனதை பற்றி நினைக்க வேண்டும். குறிப்பாக அழுத்தமான சூழ்நிலைகளில் மற்றவர்கள் வித்தியாசமாக செயல்படுவதை விட சிலர் மட்டும் ஏன் ஒரு வழியில் செயல்படுகிறார்கள்? மற்றவர்களை விட அழுத்தத்தின் கீழ் சிறந்த தகவலறிந்த முடிவுகளை எடுக்க அனைவரையும் தூண்டுவது எது? அதை எப்படி உங்களால் உடைக்க முடியும்? என்பனவற்றை சிந்திக்க வேண்டும்”

Dravid

“அதை உங்களால் செய்ய முடிந்தால் மற்றவருடைய மனதிற்குள் சென்று அழுத்தமான சூழ்நிலையில் அவர்கள் என்ன செய்வார்கள் என்பதை உணர முடியும். குறிப்பாக அழுத்தத்தில் தோனி விளையாடும் போது அவருடைய மனதிற்குள் என்ன ஓடும்? அவர் ஏன் கடைசி வரை விளையாடுகிறார்? அவர் அங்கே நம்ப முடியாது ஒன்றை செய்வதற்கான திறமையை பெற்றுள்ளார். அவர் எப்படி யோசிக்கிறார்? என்பது அவரது மனதிற்குள் இருக்கும் ஒன்று. எனவே அதை நாம் புரிந்து கொள்வது மிகவும் புத்திசாலித்தனமாக இருக்கும் என்று நினைக்கிறேன்” எனக்கு கூறினார்.

இதையும் படிங்க:வீடியோ : சேண்ட் பேப்பர் எடுத்துட்டு வரலையா? ஆஷஸ் கெளரவதுக்காக நேருக்கு நேராக மோதிகொண்ட இங்கிலாந்து – ஆஸி பிரதமர்கள்

அந்த நிலையில் ஐபிஎல் 2023 தொடரில் முழங்கால் வலியுடன் சிறப்பாக கேப்டன்ஷிப் செய்த தோனி 5வது கோப்பையை வென்று வெற்றிகரமான கேப்டன் என்ற சாதனையை படைத்தார். மறுபுறம் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் பயிற்சியாளராக தோல்வியை சந்தித்த ராகுல் டிராவிட் அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் தொடர்ந்து இந்திய அணியுடன் செயல்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement