IND vs SL : 2வது ஒன்டே நடைபெறும் ஈடன் கார்ட்னஸ் மைதானம் எப்படி? புள்ளிவிவரங்கள், பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

Eden Gardens Kolkata
- Advertisement -

இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 67 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று அசத்தியுள்ளது. குறிப்பாக வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டியில் பேட்டிங்கில் விராட் கோலி, ரோஹித் சர்மா, கில் போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் அதிரடியான ரன் குவிப்பில் 374 ரன்களை இலக்காக நிர்ணயித்து பின்னர் பந்து வீச்சிலும் இலங்கையை 306 ரன்களுக்கு கட்டுப்படுத்திய இந்தியா ஜடேஜா, பும்ரா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாமலேயே இருக்கும் வீரர்களை வைத்து சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.

அதே புத்துணர்ச்சியுடன் அடுத்ததாக ஜனவரி 12ஆம் தேதியன்று நடைபெறும் 2வது போட்டியிலும் வென்று ஆரம்பத்திலேயே இத்தொடரை 2 – 0 என்ற கணக்கில் கைப்பற்ற இந்தியா போராடவுள்ளது. மறுபுறம் முதல் போட்டியில் முடிந்தளவுக்கு போராடிய இலங்கை இப்போட்டியில் வென்று தொடரை சமன் செய்யப் போராட உள்ளது. அதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள இப்போட்டி மதியம் 1.30 மணிக்கு உலக புகழ் பெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

- Advertisement -

பழமையான ஈடன் கார்ட்ஸ்:
கடந்த 1864இல் தோற்றுவிக்கப்பட்டு 1934 முதல் சர்வதேச போட்டிகளை நடத்தி வரும் ஈடன் கார்டன்ஸ் மைதானம் இந்தியாவிலேயே வெறித்தனமான ரசிகர்களைக் கொண்ட மிகவும் பழமையான மைதானங்களில் ஒன்றாக ஜொலிக்கிறது. தற்போது நவீன வசதிகளுடன் 66,000 ரசிகர்கள் அமரும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள இம்மைதானத்தில் எத்தனையோ மறக்க முடியாத போட்டிகள் நடைபெற்றுள்ளன.

1. அந்த வகையில் வரலாற்றில் இங்கு 21 போட்டியில் விளையாடியுள்ள இந்தியா 12 வெற்றிகளையும் 8 தோல்விகளையும் சந்தித்துள்ளது. 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது. குறிப்பாக இலங்கைக்கு எதிராக களமிறங்கிய 5 போட்டியில் 3 வெற்றியும் 1 தோல்வியும் இந்தியா பதிவு செய்துள்ளது. மொத்தமாக வரலாற்றில் இங்கு நடைபெற்ற 30 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 18 வெற்றிகளையும் சேசிங் செய்த அணிகள் 11 வெற்றிகளையும் பதிவு செய்துள்ளன.

- Advertisement -

2. இம்மைதானத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேனாக சச்சின் டெண்டுல்கர் (496 ரன்கள்) உள்ளார். அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரராக ரோகித் சர்மா கடந்த 2014இல் இலங்கைக்கு எதிராக 264 ரன்கள் குவித்ததை மறக்க முடியாது. இம்மைதானத்தில் அதிக விக்கெட்டுகளை பவுலராக அனில் கும்ப்ளே மற்றும் கபில் தேவ் ஆகியோர் தலா 14 விக்கெட்டுகளுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த பவுலர் அனில் கும்பேளே : 6/12, 1993.

3. இம்மைதானத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி : 404/5 – இந்தியா, இலங்கைக்கு எதிராக, 2014. இங்கு வெற்றிகரமாக அதிகபட்ச இலக்கை சேசிங் செய்த அணி : இந்தியா – 317/3, இலங்கைக்கு எதிராக, 2009. இங்கு குறைந்தபட்ச இலக்கை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய அணி : இந்தியா – 195, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, 1993

- Advertisement -

பிட்ச் ரிப்போர்ட்:
ஈடன் கார்டன்ஸ் மைதானம் வரலாற்றில் எப்போதும் பேட்டிங்க்கு சாதகமான ஒன்றாகவே இருந்து வருகிறது. குறிப்பாக இம்மைதானத்தின் பவுண்டரி அளவுகள் 21ஆம் நூற்றாண்டில் மிகவும் சிறியதாக குறைக்கப்பட்டுள்ளதால் ஏற்கனவே பேட்டிங்க்கு சாதகமாக இருக்கும் பிட்ச்சில் நிலைத்து நிற்கும் பேட்ஸ்மேன்கள் எளிதாக பெரிய ரன்களை அதிரடியாக குவிக்கலாம். அதற்கு இங்குள்ள அவுட்ஃபீல்டு மேலும் வேகமாக இருந்து உதவி செய்யும்.

இங்கு வரலாற்றில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளின் அடிப்படையில் சராசரி ஸ்கோர் 255 ரன்களாகும். அதே சமயம் இம்மைதானத்தில் ஸ்பின்னர்கள் மிடில் ஓவர்களில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி விக்கெட்டுகளை எடுப்பார்கள். மறுபுறம் வேகப்பந்து வீச்சாளர்கள் வழக்கம் போல புதிய பந்தில் ஸ்விங் கிடைக்கும் பட்சத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். இல்லையேல் சுமாராக பந்து வீசினால் அடி வாங்குவதற்கு வாய்ப்புள்ளது.

- Advertisement -

அத்துடன் இது இரவு நேர போட்டியாக நடைபெறுவதால் பனியின் தாக்கம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் வரலாற்றில் இங்கு நிறைய போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் வென்றுள்ளன. எனவே முதல் போட்டியை போலவே டாஸ் வெல்லும் கேப்டன் வென்று முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்களை குவித்தால் வெற்றி எளிதாக கிடைக்கலாம்.

இதையும் படிங்கசச்சினை நெருங்கும் கிங் கோலி, ரிக்கி பாண்டிங்கின் ஆல் டைம் சாதனையை தகர்த்து புதிய தனித்துவமான உலக சாதனை

வெதர் ரிப்போர்ட்:
இப்போட்டி நடைபெறும் நாளன்று கொல்கத்தா நகரில் மழைக்கான வாய்ப்பில்லை என்பதால் இப்போட்டி முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம்.

Advertisement