IND vs SL : நாங்க தோத்ததுக்கே நாங்க பண்ண இந்த தப்பு தான் காரணம் – தசுன் ஷனகா பேட்டி

Shanaka
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நேற்று ஜனவரி 10-ஆம் தேதி இந்தியாவில் துவங்கியது. ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றிய வேளையில் அடுத்ததாக தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது.

INDvsSL

- Advertisement -

இந்த தொடரிலும் இந்திய அணி தொடர்ந்து தங்களது ஆதிக்கத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது 50 ஓவர்களின் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 373 ரன்கள் குவித்தது.

இந்திய அணி சார்பாக விராட் கோலி 113 ரன்களையும், ரோகித் சர்மா 83 ரன்களையும், சுப்மன் கில் 70 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 374 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை அணியானது 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்களை குவித்தது. இதன் காரணமாக 67 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த போட்டியின் தோல்வி குறித்து பேசிய இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா கூறுகையில் : இந்திய அணியின் துவக்க வீரர்கள் சிறப்பான துவக்கத்தை கொடுத்தார்கள். அதேபோன்று புதிய பந்தில் நாங்கள் பந்துவீச்சில் சிறப்பாக செயல்படவில்லை. அதை இந்திய பேட்ஸ்மேன்கள் சரியாக பயன்படுத்திக்கொண்டனர்.

- Advertisement -

அதேபோன்று பந்துவீச்சாளர்களுக்கு நல்ல ஸ்விங் கிடைத்தும் அவர்கள் அதனை பயன்படுத்தி கொள்ள தவறிவிட்டனர். பந்துவீச்சில் நாங்கள் செய்த தவறே இந்த தோல்விக்கு காரணம் முதல் 10 ஓவர்களில் நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்திருந்தாலும் அதன் பின்னர் எங்களால் பெரிய அளவில் ரன்களை குவிக்க முடியவில்லை.

இதையும் படிங்க : சச்சினை நெருங்கும் கிங் கோலி, ரிக்கி பாண்டிங்கின் ஆல் டைம் சாதனையை தகர்த்து புதிய தனித்துவமான உலக சாதனை

இனி வரும் போட்டிகளில் நாங்கள் வெற்றிகளை பெற முயற்சிப்போம் என தசுன் ஷனகா கூறியது குறிப்பிடத்தக்கது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி ஜனவரி 12-ஆம் தேதி கொல்கத்தா மைதானத்தில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement