IND vs SL : முதல் ஒன்டே நடைபெறும் கௌகாத்தி மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரங்கள், பிட்ச் – வெதர் ரிப்போர்ட் இதோ

Guwahati Cricket Stadim Ground
- Advertisement -

இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் வென்ற ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் இந்திய அணி 2024 டி20 உலக கோப்பைக்கு தயாராகும் பயணத்தை வெற்றியுடன் துவங்கியது. அதைத்தொடர்ந்து வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் இலங்கைக்கு எதிராக நடைபெறும் ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா தலைமையில் விராட் கோலி, பும்ரா உள்ளிட்ட சீனியர் நட்சத்திரங்கள் அடங்கிய முதன்மை அணி விளையாடுகிறது. பொதுவாகவே இருதரப்பு தொடர்களில் தொடர் வெற்றிகளையும் சொந்த மண்ணில் வலுவான செயல்பாடுகளையும் வெளிப்படுத்தும் இந்தியா இம்முறை சொந்த நாட்டில் நடைபெறும் உலக கோப்பையை வெல்வதற்கு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது.

எனவே அதை பயன்படுத்தி 2011 போலவே மீண்டும் உலகக் கோப்பை வென்று சரித்திரம் படைக்க தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரில் தேவையான வீரர்களை கண்டறிந்து வெற்றி பெறுவதற்கு இந்தியா போராட உள்ளது. மறுபுறம் வலுவான இந்தியாவுக்கு எதிராக டி20 தொடரை போலவே முடிந்தளவுக்கு சவாலை கொடுத்து இத்தொடரை கைப்பற்ற இலங்கையும் முயற்சிக்க உள்ளது. அதனால் இரு நாட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள இத்தொடரின் முதல் போட்டி ஜனவரி 10ஆம் தேதியன்று மதியம் 1.30 மணிக்கு அசாம் மாநிலம் கௌகாத்தி நகரில் இருக்கும் பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

- Advertisement -

கௌகாத்தி மைதானம்:
1. ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவும் இலங்கையும் வரலாற்றில் இதுவரை 162 போட்டியில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இந்தியா 93 போட்டியில் வென்று வலுவான அணியாக திகழ்கிறது. இலங்கை 57 போட்டிகளில் வென்றுள்ளது. 11 போட்டிகள் மழையால் முடிவின்றி போனது. 1 போட்டியில் சமனானது.

2. குறிப்பாக இத்தொடர் நடைபெறும் இந்திய மண்ணில் வரலாற்றில் இவ்விரு அணிகளும் மோதிய 51 ஒருநாள் போட்டிகளில் இந்தியா 36 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. இலங்கை 12 வெற்றிகளை பதிவு செய்தது. 3 போட்டி முடிவின்றி போனது.

- Advertisement -

3. கடந்த 2012இல் தோற்றுவிக்கப்பட்டு 40,000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ள இம்மைதானத்தில் வரலாற்றில் முதலும் கடைசிமாக கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இன்டீஸை 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அப்போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட 322 ரன்களை ரோஹித் சர்மா 152* (117), விராட் கோலி 140 (107) ரன்களை விளாசி எளிதாக வெற்றி பெற வைத்தனர். அந்த வகையில் இங்கு ஒரு போட்டி மட்டுமே நடைபெற்றுள்ளதால் மேற்கொண்டு பார்க்க புள்ளி விவரங்கள் இல்லை.

பிட்ச் ரிப்போர்ட்:
கௌகாத்தி மைதானம் வரலாற்றில் பேட்ஸ்மேன்களுக்கே அதிக சாதகமாக இருந்து வருகிறது. குறிப்பாக இங்குள்ள பிட்ச் ஆரம்பத்தில் வேகமாகவும் நேரம் செல்ல செல்ல மெதுவாகவும் மாறும் என்று எதிர்பார்ப்பட்டாலும் பெரும்பாலும் பேட்ஸ்மேன்கள் அதிக ஆதிக்கத்தை செலுத்தி பெரிய ரன்களை குவித்து வருகிறார்கள். அதற்கு எடுத்துக்காட்டாக 2018இல் இங்கு நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 600க்கும் மேற்பட்ட ரன்களை விளாசிய பேட்ஸ்மேன்கள் கடைசியாக இங்கு கடந்த அக்டோபர் மாதம் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய டி20 போட்டியிலும் 40 ஓவரில் 400+ ரன்களை தெறிக்க விட்டார்கள்.

- Advertisement -

அப்போட்டியில் டேவிட் மில்லர் சதமடித்தும் இறுதியில் இந்தியா சாதுரியமாக செயல்பட்டு வென்றது. எனவே இம்முறையும் பேட்டிங்க்கு சாதகமாக இருக்கும் என்று உறுதியாக நம்பப்படும் இம்மைதானத்தில் புதிய பந்து வீச்சாளர்கள் பவர் பிளே ஓவர்களில் ஸ்விங் கிடைத்தால் நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். அதே போல் மிடில் ஓவர்களில் திறமையான சுழல் பந்துவீச்சாளர்கள் கணிசமான விக்கெட்டுகளை எடுக்கலாம்.

மேலும் இது பகலிரவு போட்டியாக நடைபெறுவதாலும் இதற்கு முன் இங்கு நடைபெற்ற 3 சர்வதேச போட்டிகளில் 2 முறை சேசிங் செய்த அணிகள் வென்றதாலும் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்து வீச தீர்மானிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

இதையும் படிங்கதோனி, விராட் கோலியவே விடமாட்டீங்க, 2019 உ.கோ சொதப்பலுக்கு நீங்க தான் காரணம் – ரசிகர்களுக்கு விஜய் சங்கர் மாஸ் பதிலடி

வெதர் ரிப்போர்ட்:
இப்போட்டி நடைபெறும் போட்டி நாளன்று கௌஹாத்தி நகரில் நல்ல தெளிவான வானிலை நிலவும் என்றும் மழை பெய்ததற்கான வாய்ப்பு இல்லை என்றும் இந்திய வானிலை மையம் தெரிவிக்கிறது. எனவே இப்போட்டி முழுமையாக நடைபெறும் என்று உறுதியாக நம்பலாம்.

Advertisement