INDvsRSA : டெஸ்ட் தொடருக்கான போட்டிகள் இந்திய நேரப்படி எத்தனை மணிக்கு துவங்குகிறது? – எந்த சேனல் தெரியுமா?

INDvsRSA
- Advertisement -

விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியானது நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை வென்ற பிறகு தற்போது அடுத்ததாக தென்னாப்பிரிக்க தொடருக்காக தயாராகி வருகிறது. ஏற்கனவே பிசிசிஐயின் மூலம் அறிவிக்கப்பட்ட இந்திய டெஸ்ட் அணி நேற்று இந்தியாவிலிருந்து புறப்பட்டு தென்ஆப்பிரிக்கா சென்றடைந்தது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற இருக்கும் 3 போட்டிகள் கொண்ட தொடரானது எதிர்வரும் 26-ஆம் தேதி செஞ்சூரியன் மைதானத்தில் துவங்க இருக்கிறது.

INDvsRSA

- Advertisement -

இதுவரை தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இல்லை என்பதனால் இம்முறை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக பலரும் கூறி வருகின்றனர். ஏனெனில் கடந்த சில வருடங்களாகவே இந்திய அணி அயல்நாட்டு மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தி வருகிறது. இதன் காரணமாக நிச்சயம் இம்முறை தென் ஆப்ரிக்க தொடரில் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக பலரும் கூறி வருகின்றனர்.

அந்த வகையில் இந்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது எந்த மைதானத்தில் நடக்கும்? இந்திய நேரப்படி எப்போது துவங்கும்? எந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்? என்பது குறித்த தகவலை நாங்கள் இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம். அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி டிசம்பர் 26ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெறும்.

starsport

அதேபோன்று 2 டெஸ்ட் போட்டி ஜோகனஸ்பர்க் மைதானத்தில் ஜனவரி 3 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை நடைபெறும். 3-வது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் 11 ஆம் தேதி முதல் 1 5ம் தேதி வரை நடைபெறும். இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் இந்திய நேரப்படி மதியம் சுமார் 1.30pm மணிக்கு துவங்கும். 3-வது டெஸ்ட் போட்டி மட்டும் மதியம் 2 மணி அளவில் துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : தெ.ஆ டெஸ்ட் தொடரை தவறவிட்ட ரோஹித் மற்றும் ஜடேஜா இப்போ எங்க இருக்காங்க தெரியுமா ? – பதில் இதோ

மேலும் இந்த தொடருக்கான தொலைக்காட்சி உரிமத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதால் இந்த தொடர் முழுவதையும் நாம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும சேனல்களில் பார்க்க முடியும். அது தவிர OTT-யில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் அப்பிலும் இந்த தொடரை காணலாம் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement