தெ.ஆ டெஸ்ட் தொடரை தவறவிட்ட ரோஹித் மற்றும் ஜடேஜா இப்போ எங்க இருக்காங்க தெரியுமா ? – பதில் இதோ

Jadeja
Advertisement

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் விளையாடிய ஜடேஜா இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது காயம் காரணமாக வெளியேறினார். அவரது காயம் தீவிரமாக இருந்ததன் காரணமாக தற்போது துவங்க உள்ள தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் அதனை தொடர்ந்து வரும் ஒருநாள் தொடரிலும் ஜடேஜா விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. அது மட்டுமின்றி அவரது காயம் குணமடைய நான்கு முதல் ஐந்து மாதங்கள் வரை பிடிக்கும் என்பதனால் அவர் ஐபிஎல் தொடருக்கு தான் திரும்புவார் என்று கூறப்படுகிறது.

IND-1

அதே போன்று தென்னாப்பிரிக்க தொடருக்கான டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோஹித் சர்மா திட்டமிட்டபடி இந்திய அணியின் பயோ பபுளில் இணைந்து மும்பையில் இந்திய அணி வீரர்களுடன் இணைந்து பயிற்சி செய்யும்போது ஏற்பட்ட காயம் காரணமாக இந்த டெஸ்ட் தொடரையே அவர் தவிர விட்டுள்ளார்.

- Advertisement -

அவரது காயம் இன்னும் சில வாரங்களில் குணமடையும் என்றும் அதன்பிறகு அவர் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியுடன் இணைவார் என்றும் கூறப்பட்டது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இந்திய டெஸ்ட் அணி தற்போது திட்டமிட்டபடி தென்னாப்பிரிக்கா சென்றடைந்துள்ள நிலையில் காயத்தால் பாதிக்கப்பட்ட ரோகித் சர்மா மற்றும் ஜடேஜா ஆகியோர் எங்கே இருக்கிறார்கள்? என்பது குறித்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

yash dull

அதன்படி ரோகித் மற்றும் ராகுல் ஆகிய இருவரும் தற்போது பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தங்கி சிகிச்சை மற்றும் பயிற்சி எடுத்து வருகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. அதன்படி இந்திய அணியின் அண்டர் 19 கேப்டனான யாஷ் துல் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் ரோகித் சர்மா மற்றும் ஜடேஜா ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க : என்னைப்பொறுத்தவரை எல்லா பார்மேட்டிலும் இவரே உலகின் நம்பர் 1 பவுலர் – வி.வி.எஸ் லக்ஷ்மனன்

அவரும் தற்போது பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வருவதால் சீனியர் வீரர்களான அவர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு அதனை மகிழ்ச்சியுடன் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement