IND vs RSA : இந்தியா தென்னாபிரிக்கா டி20 தொடர் எத்தனை மணிக்கு துவங்குகிறது? – எந்த சேனலில் பார்க்கலாம்?

Temba-Bavuma
- Advertisement -

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரை விளையாடி முடித்த கையோடு இந்திய அணி அடுத்ததாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் வீழ்த்திய இந்திய அணியானது அடுத்ததாக தென்னாப்பிரிக்க தொடரிலும் வெற்றி பெற்று உலகக் கோப்பை தொடருக்கு தெம்புடன் செல்ல காத்திருக்கிறது.

INDvsRSA

- Advertisement -

இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான தென்னாப்பிரிக்கா அணி ஏற்கனவே இந்தியா வந்தடைந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நாளை செப்டம்பர் 28-ஆம் தேதி துவங்கும் இந்த டி20 தொடரானது அக்டோபர் நான்காம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான போட்டிகள் எங்கெங்கு நடைபெறும்? இந்திய நேரப்படி எத்தனை மணிக்கு துவங்கும்? எந்த தொலைக்காட்சியில் கண்டு ரசிக்கலாம்? என்பது குறித்த தெளிவான தகவலை தான் இங்கே நாங்கள் உங்களுக்காக தொகுத்து வழங்கி உள்ளோம். அதன்படி நாளை செப்டம்பர் 28-ஆம் தேதி முதல் டி20 போட்டியானது திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது.

INDvsRSA

அதனை தொடர்ந்து அக்டோபர் 02-ஆம் தேதி இரண்டாவது டி20 போட்டியானது கவுஹாத்தி மைதானத்தில் நடைபெற உள்ளது. இறுதியாக மூன்றாவது டி20 போட்டியானது அக்டோபர் 04-ஆம் தேதி இந்தூர் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த மூன்று போட்டிகளுமே இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

மேலும் இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும நிறுவனம் வாங்கியுள்ளதால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிகளில் நீங்கள் இந்த போட்டிகளை நேரலையாக கண்டு களிக்கலாம். அதுமட்டுமின்றி ஆன்லைன் மூலம் இந்த தொடரினை காண விரும்புவோர் ஹாட் ஸ்டார் ஆப்பின் மூலம் இந்த தொடர் முழுவதையும் கண்டு களிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இந்தியாவை விமர்சித்த இங்கிலாந்துக்கு சரியான சவுக்கடி – நூற்றாண்டுக்கு பின் எம்சிசி பேசியது இதோ

இந்த டி20 தொடருக்கு அடுத்து அக்டோபர் 6-ஆம் தேதி முதல் அக்டோபர் 11-ஆம் தேதி வரை 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும் நடைபெற உள்ளதால் இந்த தொடரானது ரசிகர்கள் மத்தியில் சுவாரசியத்தை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement