இந்தியாவை விமர்சித்த இங்கிலாந்துக்கு சரியான சவுக்கடி – நூற்றாண்டுக்கு பின் எம்சிசி பேசியது இதோ

Womens Cricket Deepati Sharma Mankad
- Advertisement -

உலகப் புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வீராங்கனை சார்லி டீனை இந்திய வீராங்கனை தீப்தி சர்மா எதிர்ப்புறம் இருக்கும் போது ரன் அவுட் செய்தது உலக அளவில் மிகப்பெரிய சர்ச்சைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. ஆரம்ப காலம் முதலே நடைமுறையில் இருந்து வரும் இந்த வகையான அவுட்டை முன்னாள் இந்திய வீரர் வினோ மன்கட் ஒருமுறை செய்ததிலிருந்து மிகவும் பிரபலமானது. அதனால் அவருடைய பெயருடன் அழைக்கப்பட்டு வந்த அந்த அவுட் நேர்மைக்கு புறம்பானதாகவும் பார்க்கப்பட்டது.

ஆனால் கிரிக்கெட்டில் பேட் – பந்து ஆகிய இரண்டும் சமமாக இருக்க வேண்டும் என்ற நிலையில் பந்து வீச்சாளர்கள் மட்டும் வெள்ளை கோட்டை ஒரு இன்ச் தாண்டி காலை வைத்தால் விதிமுறைப்படி நோ-பால் வழங்கி அதற்கு தண்டனையாக பிரீ ஹிட் கொடுக்கப்படுகிறது. மறுபுறம் அதே விதிமுறை தான் ஒரு பவுலர் பந்தை கையிலிருந்து வெளிவிடும் வரை எதிர்ப்புறம் இருக்கும் பேட்ஸ்மேன் எதிர்ப்புறம் இருக்கும் வெள்ளை கோட்டைத் தாண்டக் கூடாது என்றும் கூறுகிறது.

- Advertisement -

அஷ்வினுக்கு வெற்றி:
ஆனால் பெரும்பாலான தருணங்களில் பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் சிங்கிள் எடுக்க வேண்டும் என்பதற்காக அப்படி ஒரு விதிமுறையே இல்லை என்பதை மறந்து நடப்பது நியாயமா என்ற கோட்பாட்டைக் கொண்ட தமிழக வீரர் அஷ்வின் ஐபிஎல் தொடரில் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லரை மன்கட் செய்து விமர்சனங்களை சந்தித்தாலும் விதிமுறைக்கு உட்பட்டு நடந்ததாக தன்னுடைய கருத்தில் விடாப்பிடியாக நின்றார்.

மேலும் உலகின் அனைத்துப் பவுலர்களும் அதை செய்ய வேண்டுமென்று வெளிப்படையான கோரிக்கை வைத்த அவரது குரலுக்கு செவிசாய்த்த கிரிக்கெட் விதிமுறைகளை நிர்வகிக்கும் லண்டனின் எம்சிசி அமைப்பு “மன்கட் அவுட்டை” ரன் அவுட் பிரிவுக்கு மாற்றி சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. அதனால் அவரது கோரிக்கை வெற்றியடைந்த காரணத்தாலேயே தீப்தி சர்மா அப்படி செய்தபோது அவருடைய பெயர் உலக அளவில் டிரெண்ட் ஆனது. ஆனால் தங்களுடைய நாட்டின் எம்சிசி அமைப்பு அங்கீகரித்த விதிமுறையை ஏற்றுக் கொள்ளாத ஆங்கிலேயர்கள் வசை பாடினர்.

- Advertisement -

குறிப்பாக அந்த தருணத்தை தொலைக்காட்சியில் வர்ணனை செய்த முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் உசேன் கிரிக்கெட் தோற்றதாக வர்ணித்தார். மேலும் இது நேர்மைக்கு மாறான செயல் என்று ஸ்டூவர்ட் பிராட் முதல் ஜேம்ஸ் ஆண்டர்சன் வரை ஏராளமான முன்னாள் இன்னாள் இங்கிலாந்து வீரர்கள் விமர்சித்தனர். அதற்கு வெல்லாமலேயே தோற்காத நியூசிலாந்தை அதிக பவுண்டரிகளை அடித்தோம் என்ற விதிமுறையை வைத்து ஏமாற்றி 2019 உலகக் கோப்பையை வென்றதை இது மோசமில்லை என்று இந்திய பிரபலங்களும் ரசிகர்களும் பதிலடி கொடுத்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் தாங்கள் அங்கீகரித்த விதிமுறையை விமர்சிக்கும் இங்கிலாந்துக்கு லண்டனின் எம்சிசி அமைப்பு தாமாக முன்வந்து விளக்கமும் பதிலடியும் கொடுத்துள்ளது. இது பற்றி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் எம்சிசி குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு. “எதிர்ப்புறம் இருக்கும் பேட்டரை ரன் அவுட் செய்வது நேர்மைக்கு புறம்பான விதி எண் 41லிருந்து ரன் அவுட் பிரிவு 38க்கு மாற்றி எம்சிசி இந்த வருடம் அறிவிப்பு வெளியிட்டது. இது பவுலர் பந்தை ரிலீஸ் செய்யும் முறை எதிர்ப்புறம் இருக்கும் பேட்டர் கிரீஸ் விட்டு வெளியே வரக்கூடாது என்பதை விளக்குகிறது”

- Advertisement -

“அந்த வகையில் தெளிவாக இருக்கும் விதிமுறையை அனைத்து நேரங்களிலும் நடுவர்கள் கடைபிடிக்க வேண்டும். நேர்மைக்குப் புறம்பான செயல் பற்றி ஆரோக்கியமான விவாதங்கள் தொடர்வதைப் போல எதிர்ப்புறம் இருக்கும் பேட்டர் முன்கூட்டியே நகர்வதும் நேர்மைக்குப் புறம்பான செயலுக்கு எடுத்துக்காட்டாகும்.

எனவே பவுலர்கள் பந்தை தங்களது கையிலிருந்து வெளிவிடும் வரை கிரீஸை தாண்டக் கூடாது என்பதே எதிர்ப்புறம் இருக்கும் பேட்டர்களுக்கு எம்சிசியின் செய்தியாகும். அவ்வாறு செய்திருந்தால் நேற்று நடைபெற்ற நிகழ்வும் நடந்திருக்காது” எனக் கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து இந்தியாவை விமர்சித்த இங்கிலாந்துக்கு இங்கிலாந்தை சேர்ந்த எம்சிசி அமைப்பே தாமாக முன்வந்து சவுக்கடி பதிலை கொடுத்துள்ளது என்றே கூறலாம்.

இதையும் படிங்க : சூதாட்டத்தில் ஈடுபட்ட உங்களுக்கு நேர்மை பற்றியும் எங்கள் தீப்தியை பற்றியும் பேச தகுதியில்லை – பாக் வீரரை விளாசும் இந்திய ரசிகர்கள்

முன்னதாக கடந்த 1834ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு போட்டியில் எட்வர்ட் மார்ட்டினை தாமஸ் பார்க்கர் இதே போல் அவுட் செய்த போது ஏற்பட்ட சர்ச்சைகளுக்கு தாமாக முன்வந்து விளக்கமளித்த எம்சிசி நூற்றாண்டுக்குப்பின் தீப்தி சர்மாவிற்கு ஆதரவாக விளக்கம்ளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement