இந்தியா தென்னாப்பிரிக்கா போட்டிகள் எப்போது துவங்குகிறது? எந்த சேனலில் பாக்கலாம் – விவரம் இதோ

IND-vs-RSA
- Advertisement -

உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து இந்திய அணியானது தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற இருக்கும் மூன்று விதமான சர்வதேச கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்று விளையாட இருக்கிறது.

அந்த வகையில் தென்ஆப்பிரிக்கா செல்லும் இந்திய அணியானது டிசம்பர் 10-ஆம் தேதி முதல் ஜனவரி 7-ஆம் தேதி வரை மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் பங்கேற்று விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்த சுற்றுப்பயத்தில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் டி20 தொடரானது டிசம்பர் 10-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

அதனைத்தொடர்ந்து ஒருநாள் தொடரானது டிசம்பர் 17-ஆம் தேதியிலிருந்து 21-ம் தேதி வரையும், டெஸ்ட் தொடரானது டிசம்பர் 26-ஆம் தேதி முதல் ஜனவரி 7-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய நேரப்படி எத்தனை மணிக்கு போட்டிகள் நடைபெறும்? எந்த சேனலில் இந்த போட்டிகளை காணலாம் என்பது குறித்து தெளிவான தகவலை நாங்கள் இங்கே உங்களுக்காக வழங்கி உள்ளோம்.

- Advertisement -

அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையே டி20 தொடரின் முதலாவது போட்டி பகல் 1:30 மணிக்கு நடைபெறும் என்றும் எஞ்சிய இரண்டு டி20 போட்டிகள் 4:30 மணிக்கு தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோன்று டெஸ்ட் போட்டிகளானது பகல் 1:30 மணிக்கு துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : 2024 டி20 உ.கோ தொடரில் ரிங்குவுக்கு போட்டியா அந்த 2 பிளேயர்ஸ் இருக்காங்க.. எச்சரித்த நெஹ்ரா

இந்நிலையில் இந்த தென்னாப்பிரிக்க தொடர்கான ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி தொலைக்காட்சியில் கண்டு களிக்கலாம். அதேபோன்று ஆன்லைனில் பார்க்க விரும்புவோர் ஹாட்ஸ்டாரில் இந்த போட்டிகளை பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement