நாளைய 2 ஆவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம் – புதுமுக வீரருக்கு அறிமுக வாய்ப்பு

IND-vs-RSA
- Advertisement -

தென்னாப்பிரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அதன்படி நேற்று டிசம்பர் 17-ஆம் தேதி நடைபெற்ற முதலாவது போட்டியில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்திய இந்திய அணியானது இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

அதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது நாளை டிசம்பர் 19-ஆம் தேதி செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்கவுள்ளது.

- Advertisement -

அதேவேளையில் இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்புடன் தென்னாப்பிரிக்க அணியும் களம் காண்பதால் இந்த போட்டி ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்த இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் நிச்சயம் ஒரு மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஏனெனில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் ஐயர் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதற்காக தயாராக இருப்பதினால் அவர் இந்திய ஒருநாள் அணியிலிருந்து விலகி உள்ளார். இதன் காரணமாக நான்காவது இடத்தில் ஏதாவது ஒரு அறிமுகம் ஆவார் என்று கூறப்படுகிறது. முதல் போட்டியிலேயே இந்திய அணி சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியதால் அவரை தவிர்த்து வேறு எந்த மாற்றமும் இருக்காது என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அதன்படி நாளைய இந்த இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் ரிங்கு சிங்கிற்கு அறிமுக வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் அற்புதமான ஆட்டத்தை செயல்படுத்தி பினிஷராக செயல்படும் ரிங்கு சிங் ஒருநாள் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடுவார் என்பதனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. அதனை தவிர்த்து இந்திய அணியில் பெரிய அளவில் வேறு எந்த மாற்றமும் இருக்காது. அந்த வகையில் நாளைய இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : எங்களை லேசா நினைக்காதீங்க.. இந்தியா மாதிரி பாகிஸ்தான் அதை செய்யும்.. முகமது ஹபீஸ் பதிலடி

1) ருதுராஜ் கெய்க்வாட், 2) சாய் சுதர்சன், 3) திலக் வர்மா, 4) கே.எல் ராகுல், 5) ரிங்கு சிங், 6) சஞ்சு சாம்சன், 7) அக்சர் படேல், 8) குல்தீப் யாதவ், 9) அர்ஷ்தீப் சிங், 10) ஆவேஷ் கான், 11) முகேஷ் குமார்.

Advertisement