எங்களை லேசா நினைக்காதீங்க.. இந்தியா மாதிரி பாகிஸ்தான் அதை செய்யும்.. முகமது ஹபீஸ் பதிலடி

Mohammed Hafeez
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்ற 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக பெர்த் நகரில் நடைபெற்ற இத்தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தானை 360 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது.

அந்த வகையில் கேப்டன் சாம் மசூட் தலைமையிலும் மோசமாக விளையாடிய பாகிஸ்தான் 28வது வருடமாக தொடர்ந்து ஆஸ்திரேலிய மண்ணில் தோல்வியை சந்தித்தது. கடைசியாக 1995இல் வென்றிருந்த அந்த அணி அதன் பின் கடந்த 28 வருடங்களாக ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு போட்டியில் கூட வெல்ல முடியாமல் திண்டாடி வருகிறது.

- Advertisement -

இப்போதும் சாதிப்போம்:
அதிலும் குறிப்பாக முதல் போட்டியின் 2வது இன்னிங்ஸில் வெறும் 89 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி பாகிஸ்தான் தோல்வியை சந்தித்தது அந்நாட்டு ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம் 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் இந்தியாவுக்கு எதிராக தலா 2 – 1 (4) என்ற கணக்கில் சந்தித்த தோல்விகளை தவிர்த்து தங்களுடைய சொந்த மண்ணில் பாகிஸ்தான் உட்பட அனைத்து அணிகளையும் ஆஸ்திரேலியா தோற்கடித்து வெற்றி நடை போட்டு வருகிறது.

அதனால் ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் தோற்கடிக்க எல்லாரும் இந்தியாவாகிவிட முடியாது என்று இந்திய ரசிகர்கள் தலைநிமிர்ந்து பேசி வருகின்றனர். இந்நிலையில் இப்போதும் இத்தொடரின் கடைசி 2 போட்டிகளில் வென்று ஆஸ்திரேலியாவை தங்களால் தோற்கடித்து கோப்பையை வெல்ல முடியும் என்று பாகிஸ்தான் அணியின் இயக்குனர் முகமது ஹபீஸ் கூறியுள்ளார்.

- Advertisement -

குறிப்பாக 2020/21இல் 36க்கு ஆல் அவுட்டான பின் இந்தியா அபார கம்பேக் கொடுத்து கோப்பையை வென்றது. அதே போல 89க்கு ஆல் அவுட்டான தங்களால் வெல்ல முடியும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “எங்கள் வீரர்களிடம் திறமை இருக்கிறது. அதை இங்கே நடைபெற்ற வலைப்பயிற்சியில் நான் பார்த்தேன். அதனால் அவர்களால் ஆஸ்திரேலியாவை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்தி கம்பேக் முடியும். நாங்கள் எங்களுடைய திட்டங்களை பின்பற்றவில்லை. ஆனால் நான் எங்கள் வீரர்கள் மீது இப்போதும் நம்பிக்கை வைத்துள்ளேன்”

இதையும் படிங்க: அரை க்ளாஸ் ஸ்கூல் பையனா பாத்தப்போ.. இதை எதிர்பாக்கவே இல்ல.. சாய் சுதர்சனை வாழ்த்திய வாசிங்டன் சுந்தர்

“ஆஸ்திரேலிய மண்ணில் பாகிஸ்தானால் தொடரை வெல்ல முடியும். ஆனால் அதற்கு எங்களுடைய திட்டங்களை துல்லியமாக செயல்படுத்த வேண்டும். நாங்கள் அதற்கான திட்டங்களுடன் களமிறங்கிய போதிலும் முதல் போட்டியில் அதைப் பின்பற்றி விளையாடுவதில் தோல்வியை சந்தித்தோம். இருப்பினும் அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவை நாங்கள் பின்னோக்கி தள்ளிய தருணங்களும் இருந்தது. எனவே நாங்கள் இத்தொடருக்காக கடினமாக தயாராகியுள்ளோம். எங்களுடைய திட்டத்தை செயல்படுத்துவதில் மட்டுமே தடுமாற்றம் இருக்கிறது” என்று கூறினார்.

Advertisement