தென்னாப்பிரிக்க அணியை அவங்க இடத்துலேயே வெச்சி செய்த இந்திய பவுலர்கள் – மாபெரும் சாதனை நிகழ்த்தி அசத்தல்

IND-Bowlers
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது தென்னாப்பிரிக்க நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கே.எல் ராகுல் தலைமையிலான இந்திய அணியானது பங்கேற்று விளையாடி வருகிறது. மேலும் இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் முன்னணி வீரர்கள் பலருக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ள வேளையில் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியே இந்த தொடரில் விளையாடி வருகிறது.

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி டிசம்பர் 17-ஆம் தேதியான இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த போட்டியின் டாசில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் மார்க்ரம் தங்களது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 27.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து 116 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக 117 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது சிறப்பாக பந்துவீசிய இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் தென் ஆப்பிரிக்கா மண்ணில் அவர்களை தங்களது சிறப்பான செயல்பாட்டின் மூலம் நசுக்கி புதிய உலக சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளனர்.

- Advertisement -

அந்த வகையில் தென் ஆப்பிரிக்கா மண்ணில் நடைபெற்ற போட்டியில் அவர்கள் முதல் 6 விக்கெட்டுகளை குறைந்த ரன்களில் இழந்தது இதுவே முதல்முறை. இந்த போட்டிக்கு முன்பாக கடந்த 2002 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் முதல் 6 விக்கெட்டுகளை 66 ரன்களில் இழந்திருந்தது. அதேபோன்று கடந்த 1999-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 68 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

இதையும் படிங்க : தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளராக வரலாற்று சாதனையை நிகழ்த்திய – அர்ஷ்தீப் சிங்

அதேபோன்று 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் இந்திய அணிக்கு எதிராக 76 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஆனால் இந்த மூன்று சம்பவங்களையும் விட இன்று நடைபெற்ற இந்த முதல் ஒருநாள் போட்டியில் 52 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் பவுலர்கள் அவர்களை மோசமான சாதனைக்கு தள்ளியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement