தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளராக வரலாற்று சாதனையை நிகழ்த்திய – அர்ஷ்தீப் சிங்

Arshdeep-Singh
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது அண்மையில் தென்னாப்பிரிக்க நாட்டில் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரில் சூரியகுமார் தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் அந்த தொடரினை சமன் செய்து அசத்தியது. அந்த தொடரின் முதலாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியும், மூன்றாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது.

- Advertisement -

அதன்படி இந்து தொடரின் முதலாவது போட்டியானது ஜோகன்னஸ்பர்க் நகரில் டிசம்பர் 17-ஆம் தேதி இன்று துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் முதலில் தங்களது அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அந்த அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 27.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்களை மட்டுமே குவித்தனர்.

அதனை தொடர்ந்து 117 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் சார்பாக இந்த போட்டியில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 10 ஓவர்கள் முழுவதுமாக பந்துவீசி 37 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் அவர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக மாபெரும் சாதனை ஒன்றினையும் நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் தென்னாப்பிரிக்க மண்ணில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்னதாக சுனில் ஜோஷி, யுஸ்வேந்திர சாஹல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய மூன்று வீரர்களும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக அந்த மண்ணில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தாலும் அவர்கள் மூவரும் சுழற்பந்து வீச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : தெறிக்க விட்ட அரஷ்தீப், ஆவேஷ் கான்.. தெ.ஆ அணியை 116க்கு சுருட்டிய இந்தியா.. 2018 சாதனையை உடைத்து புதிய சாதனை

இதன் காரணமாக தென்னாப்பிரிக்க மண்ணில் ஒருநாள் போட்டிகளில் அந்த அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை அர்ஷ்தீப் சிங் நிகழ்த்தியுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடரின் போது அதிகளவு ரன்களை விட்டுக் கொடுத்த இவரது செயல்பாடு அதிகளவு விமர்சிக்கப்பட்டிருந்த வேளையில் தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் தனது அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்திய அர்ஷ்தீப் சிங்கின் செயல்பாடு அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement