முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலேயே ரசிகர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றம் – போட்டி துவங்குவதில் தாமதம்?

IND-vs-RSA
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது டிசம்பர் 26-ஆம் தேதி இன்று துவங்க உள்ளது. ஏற்கனவே தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது அங்கு நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்தது.

அதனை தொடர்ந்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது இன்று முதல் துவங்கவுள்ளது.

- Advertisement -

இதுவரை தென்னாப்பிரிக்க மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியதே இல்லை என்கிற மோசமான சாதனையை தகர்த்து முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்க தயாராகி வருகிறது. இதன் காரணமாக ரசிகர்களும் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளனர்.

அந்த வகையில் செஞ்சூரியன் நகரில் இன்று நடைபெற இருக்கும் இந்த முதலாவது போட்டி தற்போது வரை துவங்காமல் உள்ளது. அதற்கு காரணம் யாதெனில் : செஞ்சூரியன் நகரில் பெய்த மழை காரணமாக தற்போது மைதானம் ஈரப்பதத்துடன் இருப்பதினால் டாஸ் தாமதம் ஆகியுள்ளது.

- Advertisement -

இந்திய நேரப்படி பிற்பகல் 1:30 மணிக்கு துவங்க வேண்டிய இந்த போட்டி சற்று தாமதமாக தான் துவங்கும் என்று தெரிகிறது. இதன்காரணமாக நிச்சயம் முதல் நாளில் ஓவர்கள் குறைய அதிக வாய்ப்பு உள்ளது. ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்த போட்டி இப்படி தாமதமாகி வருவது ரசிகர் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஐபிஎல் தொடரில் விளையாட சிக்கல்? நவீன், முஜீப் உள்ளிட்ட 3 வீரர்களுக்கு வித்யாச தடை விதித்த ஆப்கானிஸ்தான் வாரியம்

இந்தமுறையாவது இந்திய அணி தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்ற வேண்டும் என்று அனைவரும் காத்திருக்கும் வேளையில் இப்படி முதல் போட்டியின் முதல் நாளிலேயே மழையால் போட்டி தாமதமாகியுள்ளது நிச்சயம் நமக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது.

Advertisement