ஐபிஎல் தொடரில் விளையாட சிக்கல்? நவீன், முஜீப் உள்ளிட்ட 3 வீரர்களுக்கு வித்யாச தடை விதித்த ஆப்கானிஸ்தான் வாரியம்

Mujeeb ur Rahman
- Advertisement -

நவீன கிரிக்கெட்டில் ஐபிஎல் போன்ற டி20 கிரிக்கெட் தொடர்களின் வருகையால் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் நாட்டுக்காக விளையாடுவதை விட பணத்திற்காக டி20 போட்டிகளில் விளையாடுவதற்கு முன்னுரிமை கொடுத்து வருகின்றனர். குறிப்பாக ஐபிஎல் தொடரை தவிர்த்து தற்போது வருடம் முழுவதும் உலகின் பல்வேறு நாடுகளிலும் ஏதேனும் ஒரு டி20 தொடர் நடைபெறுவதால் அதில் விளையாடுவதற்காக பல வீரர்களும் ஆர்வம் காட்டுகின்றனர்.

சொல்லப்போனால் டி20 தொடர்களில் விளையாடுவதற்காக குவிண்டன் டீ காக் போன்ற நட்சத்திர வீரர்கள் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் 31 வயதிலேயே அதிரடியாக ஓய்வு பெறுவதாக வெளிப்படையாக அறிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் நடைபெற்று முடிந்த 2023 உலகக் கோப்பையுடன் ஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக 24 வயதிலேயே ஆப்கானிஸ்தானை சேர்ந்த வீரர் நவீன்-உல்-ஹக் அறிவித்தார்.

- Advertisement -

வித்யாசமான தடை:
அதற்கு ஆப்கானிஸ்தான் காரியமும் சம்மதம் தெரிவித்தது. ஆனால் தற்போது விஷயம் என்னவெனில் நவீன், முஜீப்-உர் ரஹ்மான், பசல் ஹக் பரூக்கி ஆகிய 3 வீரர்கள் வெளிநாடுகளில் நடைபெறும் பிரீமியர் லீக் டி20 தொடர்களில் விளையாடுவதற்காக ஆப்கானிஸ்தான் விளையாடும் டி20 போட்டிகளை புறக்கணிக்க முடிவெடுத்துள்ளார்கள்.

அதனால் ஆப்கானிஸ்தான் வாரியத்தின் வருடாந்திர மத்திய சம்பள ஒப்பந்தத்தில் இந்த 3 வீரர்களும் வெளியேறுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அதனால் அதிருப்தியடைந்த ஆப்கானிஸ்தான் வாரியம் இந்த 3 வீரர்களும் அடுத்த 2 வருடத்திற்கு வெளிநாடுகளில் நடைபெறும் ஐபிஎல், பிபிஎல் போன்ற டி20 தொடர்களில் விளையாடுவதற்கான என்ஓசி சான்றிதழை ரத்து செய்து தடை விதித்துள்ளது.

- Advertisement -

மேலும் இந்த விவகாரத்தை விசாரிப்பதற்கு புதிய கமிட்டி ஒன்று உருவாக்கப்படும் என்றும் ஆப்கானிஸ்தான் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. அத்துடன் நாட்டை புறக்கணித்து நினைத்த அவர்கள் அடுத்த ஒரு வருடத்திற்கான மத்திய ஒப்பந்தத்தையும் இழப்பார்கள் என்றும் ஆப்கானிஸ்தான் வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் 3 வீரர்களும் அடுத்த வருடம் நடைபெறும் ஐபிஎல் தொடரில் விளையாடுவார்களா என்பது சந்தேகமாகியுள்ளது.

இதையும் படிங்க: இருப்பதிலேயே அவர் தான் எங்களுக்கு வெறித்தனமான போட்டியை கொடுக்கும் இந்திய வீரர் – ஐடன் மார்க்ரம் ஓப்பன்டாக்

இதில் முஜிப் உர் ரஹ்மான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 2 கோடிக்கு சமீபத்தில் நடைபெற்ற ஏலத்தில் வாங்கப்பட்டார். அதே போல நவீன்-உல்-ஹக் ஏற்கனவே லக்னோ அணியில் தக்க வைக்கப்பட்ட நிலையில் பரூக்கியும் ஹைதராபாத் அணிக்காக விளையாட தக்க வைக்கப்பட்டுள்ளார். இருப்பினும் இந்தியாவுடன் பல வகைகளிலும் ஆப்கானிஸ்தான் வாரியம் நட்புடன் இருப்பதால் கடைசி நேரத்தில் ஐபிஎல் தொடரில் இந்த 3 வீரர்களையும் விளையாட அனுமதிக்குமாறு பிசிசிஐ கேட்கும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement