இந்தியா – தெ.ஆ 2வது டி20 நடைபெறும் போர்ட் எலிசெபெத் மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம்.. பிட்ச் ரிப்போர்ட்

St George's Park Port Elizabeth
- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக துவங்கியுள்ள 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி விளையாடி வருகிறது. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராக இரு அணிகளுக்கும் உதவும் இத்தொடரின் முதல் போட்டி டிசம்பர் 10ஆம் தேதி டர்பன் நகரில் நடைபெற்ற போதிலும் மழையால் டாஸ் கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

இதை தொடர்ந்து நடைபெறும் 2வது போட்டியில் ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென்னாப்பிரிக்கா தங்களுடைய சொந்த மண்ணில் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற தயாராகியுள்ளது. மறுபுறம் ஆஸ்திரேலியாவை சமீபத்திய தொடரில் 4 – 1 என்ற கணக்கில் தோற்கடித்த உத்வேகத்தை கொண்டுள்ள இளம் இந்திய அணி தென்னாப்பிரிக்காவையும் வீழ்த்த போராட உள்ளது.

- Advertisement -

செயின்ட் ஜார்ஜ் மைதானம்:
அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்போட்டி டிசம்பர் 12ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தென்னாப்பிரிக்காவின் போர்ட் ஆஃப் எலிசபெத் நகரில் இருக்கும் செயிண்ட் ஜார்ஜ்’ஸ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
1889 முதல் சர்வதேச போட்டிகளை நடத்தி வரும் இந்த பழமையான மைதானம் 19000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இங்கே 2007 முதல் நடைபெற்ற வரும் டி20 போட்டிகளில் இதுவரை நடைபெற்றுள்ள 3 போட்டிகளிலும் விளையாடியுள்ள தென்னாப்பிரிக்கா 2 வெற்றிகளையும் 1 தோல்வியும் பதிவு செய்துள்ளது. ஆனால் இந்தியா இம்மைதானத்தில் வரலாற்றில் விளையாடுவது இதுவே முதல் முறையாகும். இந்த மைதானத்தில் அதிக டி20 ரன்கள் (72) மற்றும் அதிகபட்ச ஸ்கோர் (70) பதிவு செய்த வீரராக குயிண்டன் டீ காக் முதலிடத்தில் இருக்கிறார்.

- Advertisement -

அதே போல இங்கு டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்கள் (4) மற்றும் சிறந்த பவுலிங்கை (4/9) பதிவு செய்த வீரராக ஜாம்பவான் டேல் ஸ்டைன் சாதனை படைத்துள்ளார். இந்த மைதானத்தில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்துள்ள அணி தென்னாப்பிரிக்கா : 179/6, நியூசிலாந்துக்கு எதிராக, 2012.

பிட்ச் ரிப்போர்ட்:
செயிண்ட் ஜார்ஜ் மைதானத்தில் ஆரம்பத்திலேயே புதிய பிட்ச் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடுவதற்கு அதிக சாதகமாக இருந்து வருகிறது. எனவே பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி விரைவாக ரன்களை சேர்ப்பது அவசியமாகும். ஏனெனில் போட்டி நடைபெற நடைபெற இங்கு ஸ்பின்னர்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்துபவர்களாக இருக்கின்றனர்.

இதையும் படிங்க: நாளைய 2 ஆவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

அதே போல வேகப்பந்து வீச்சாளர்களும் சமமான ஆதிக்கத்தை செலுத்தவர்கள் என்று நம்பலாம். எனவே சமமான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த மைதானத்தில் 2007இல் சேசிங் செய்த அணியும் 2012 மற்றும் 2020இல் நடைபெற்ற போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியும் வெற்றி கண்டுள்ளது. அதனால் இந்த போட்டியில் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்து ஓரளவு பெரிய ஸ்கோர் எடுப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

Advertisement