நாளைய 2 ஆவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

IND-vs-RSA
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது தென்னாப்பிரிக்க நாட்டில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது நேற்று டிசம்பர் 10-ஆம் டர்பன் நகரில் நடைபெற இருந்தது.

ஆனால் நேற்று இரவு டர்பன் நகரில் பெய்த மழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் இந்த முதலாவது டி20 போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது டிசம்பர் 12-ஆம் தேதி நாளை நடைபெற உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் நாளைய இந்த இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்கள் இடம் பெறுவார்கள்? என்பது குறித்த உத்தேச பட்டியலை நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.

அதன்படி நாளைய போட்டியில் துவக்க வீரர்களாக யாஷஸ்வி ஜெய்ஸ்வாலும், சுப்மன் கில்லும் களமிறங்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக ருதுராஜ் கெய்க்வாட் தனது வாய்ப்பை தவறவிடுவார் என்று தெரிகிறது. அதேபோன்று மூன்றாவது இடத்தில் ஷ்ரேயாஸ் ஐயரும், நான்காவது இடத்தில் சூரியகுமார் யாதவும் விளையாடுவார்கள்.

- Advertisement -

ஐந்தாவது இடத்தில் ரிங்கு சிங்கும், ஆறாவது இடத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ஜிதேஷ் ஷர்மாவும் விளையாட வாய்ப்புள்ளது. மேலும் ஆல்ரவுண்டராக ஏழாவது இடத்தில் ரவீந்திர ஜடேஜாவும், எட்டாவது இடத்தில் ரவி பிஷ்னாய்யும் விளையாடுவார்கள். எஞ்சியுள்ள மூன்று இடங்களில் வேகப்பந்து வீச்சாளர்களாக அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் விளையாட அதிக வாய்ப்புள்ளது. அதன்படி நாளைய இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : 2023 உ.கோ ரோஹித் மாதிரி ஒரு பிளேயர் கிடைச்சுட்டாரு.. சரியா யூஸ் பண்ணுங்க.. சஞ்சய் மஞ்ரேக்கர் அட்வைஸ்

1) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 2) சுப்மன் கில், 3) ஷ்ரேயாஸ் ஐயர், 4) சூரியகுமார் யாதவ், 5) ரிங்கு சிங், 6) ஜிதேஷ் சர்மா, 7) ரவீந்திர ஜடேஜா, 8) ரவி பிஷ்னாய், 9) அர்ஷ்தீப் சிங், 10) முகமது சிராஜ், 11) முகேஷ் குமார்.

Advertisement