மீண்டும் விளையாட வரும் மழை? இந்தியா – தெ.ஆ 2வது டி20யாவது நடக்குமா? முழு வெதர் ரிப்போர்ட்

St George's Park Port Elizabeth 2
- Advertisement -

தென்னாபிரிக்கா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் பயணத்தின் அங்கமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இருப்பினும் டிசம்பர் 10ஆம் தேதி டர்பன் நகரில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டி மழையால் டாஸ் கூட வீசப்படாமல் மொத்தமாக ரத்து செய்யப்பட்டது இரு அணி வீரர்களையும் ரசிகர்களையும் ஏமாற்றமடைய வைத்தது.

இதைத் தொடர்ந்து இத்தொடரின் 2வது போட்டி டிசம்பர் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. அதில் ஐடன் மார்க்ரம் தலைமையில் தங்களுடைய சொந்த மண்ணில் இந்திய அணியை தோற்கடித்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெறும் முனைப்புடன் தென்னாப்பிரிக்கா விளையாட உள்ளது. அதற்கு சவாலாக சூரியகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலிய தோற்கடித்த தெம்புடன் தென்னாப்பிரிக்காவை வீழ்த்த போராட உள்ளது.

- Advertisement -

விளையாட வரும் மழை:
அந்த வகையில் இரு அணி வீரர்கள் மற்றும் ரசிகர்கள்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த போட்டி தென்னாபிரிக்காவின் போர்ட் எலிசபெத் நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ்’ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு துவங்க உள்ளது. இருப்பினும் இந்த போட்டியிலும் முதல் போட்டியை போலவே மழை விளையாடுவதற்கு தயாராகியுள்ளது.

ஆம் இப்போட்டி நடைபெறும் போர்ட் எலிசபெத் நகரில் டிசம்பர் 12ஆம் தேதி சராசரியாக 30% மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவிக்கிறது. குறிப்பாக உள்ளூர் நேரப்படி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முறையே 43%, 47%, 51%, 51%, 47%, 49%, 53%, 49% மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

- Advertisement -

இருப்பினும் உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு தான் போட்டி துவங்குகிறது. ஆனால் அப்போது 32% என்றளவுக்கு குறையும் மழையின் அளவு இரவு 7, 8, 9, 10 மணி வரை சராசரியாக 5% மட்டுமே பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது. இதனால் இந்த இப்போட்டி மழையால் தாமதமாக துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த போட்டியில் டாஸ் வீசுவதற்கு சற்று தாமதம் ஏற்படும் என்று நம்பப்படுகிறது.

இதையும் படிங்க: இந்தியா – தெ.ஆ 2வது டி20 நடைபெறும் போர்ட் எலிசெபெத் மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம்.. பிட்ச் ரிப்போர்ட்

ஆனால் அதன் பின் போட்டி நடைபெறுவதற்கு பிரகாசமான வாய்ப்புகள் உள்ளது. சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் மழை வந்தாலும் ஓவர்கள் குறைக்கப்பட்டு முடிவு தெரியும் அளவுக்கு இந்த போட்டி நடைபெறும் என்று உறுதியாக நம்பலாம். மாறாக முதல் போட்டி போல ஒரு பந்து கூட வீசப்படாமல் இப்போட்டி ரத்து செய்யப்படுவதற்கு வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement