டர்பனில் அச்சுறுத்தும் மழை.. இந்தியா – தெ.ஆ முதல் டி20 நடைபெறுமா? முழுமையான வெதர் ரிப்போர்ட்

Kingsmead Rain
- Advertisement -

தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் முதல் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை துவங்குகிறது. 2023 உலகக் கோப்பையில் தோல்விகளை சந்தித்த இவ்விரு அணிகளும் அடுத்ததாக 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக இத்தொடரில் மோதுகின்றன. அதில் கடந்த வாரம் ஆஸ்திரேலியாவை 4 – 1 என்ற கணக்கில் டி20 தொடரில் தோற்கடித்த உற்சாகத்துடன் இந்தியா இத்தொடரில் களமிறங்குகிறது.

குறிப்பாக விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற சீனியர்கள் ஓய்வெடுக்கும் இத்தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையில் ரிங்கு சிங், ஜெய்ஸ்வால், முகேஷ் குமார், ரவி பிஷ்னோய் போன்ற தரமான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி ஆஸ்திரேலியாவை தோற்கடித்ததை போலவே சவாலான தென்னாப்பிரிக்காவையும் வீழ்த்த தயாராகியுள்ளது. மறுபுறம் ஐடன் மார்க்ரம் தலைமையில் டேவிட் மில்லர், க்ளாஸென் போன்ற அதிரடி வீரர்களுடன் தென்னாப்பிரிக்காவும் வலுவாக இருக்கிறது.

- Advertisement -

அச்சுறுத்தும் மழை:
எனவே சொந்த மண்ணில் இந்தியாவை தோற்கடித்து தங்களின் தரத்தை நிரூபிக்க தென்னாப்பிரிக்கா போராட உள்ளது. அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்தொடரின் முதல் போட்டி டிசம்பர் 10ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு டர்பன் நகரில் உள்ள கிங்ஸ்மீட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

2007 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக பவுல் அவுட் முறையில் வென்றது மட்டுமல்லாமல் இங்கிலாந்துக்கு எதிராக யுவராஜ் சிங் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்தது உட்பட இம்மைதானத்தில் வரலாற்றில் விளையாடிய 5 போட்டிகளில் இந்தியா 4 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. எஞ்சிய ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. அதே போல தற்போது 6வது முறையாக இந்தியா இங்கே களமிறங்கும் போட்டியில் மழை வருவதற்கு தயாராக உள்ளது.

- Advertisement -

ஆம் இப்போட்டி நடைபெறும் கிங்ஸ்மீட் நகரில் டிசம்பர் 10ஆம் தேதி சராசரியாக 40% மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக அங்குள்ள மாநில மையம் தெரிவிக்கிறது. குறிப்பாக உள்ளூர் நேரப்படி பகல் 12 மணிக்கு 53% இடியுடன் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது. இருப்பினும் மாலை 4 மணிக்கு படிப்படியாக மழையின் அளவு குறைந்து 20% மட்டுமே பொழிவதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறுகிறது.

இதையும் படிங்க: இந்தியா – தெ.ஆ அணிகள் மோதும் முதல் டி20 நடைபெறும் கிங்ஸ்மீட் மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம்.. பிட்ச் ரிப்போர்ட்

ஆனால் 6 மணிக்கு 25% என்று அதிகரிக்கும் மழையின் அளவு 7 மணி முதல் இரவு 10 மணி வரை சராசரியாக 51% பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது. இதனால் இப்போட்டி முழுமையாக நடைபெறுவதில் சிக்கல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் 40 – 50% போன்ற மிதமான அளவில் மட்டுமே மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிய வருவதால் முடிந்தளவுக்கு இப்போட்டியை ஓவர்கள் குறைத்து நடத்த அம்பயர்கள் முயற்சிப்பார்கள். அதையும் தாண்டி மழை பெய்யும் பட்சத்தில் போட்டிய ரத்து செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement