இந்தியா – தெ.ஆ டி20 தொடர்.. முதல் மேட்ச்லயே இப்படியா ஆகணும்.. ரசிகர்கள் ஏமாற்றம்

IND vs RSA 1st t20
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடரில் தோல்வியை கொடுத்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் 4 – 1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. அதை தொடர்ந்து தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அங்கு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட அடுத்தடுத்த தொடர்களில் விளையாடுகிறது.

அதில் முதலாவதாக 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் டிசம்பர் 10ஆம் தேதி துவங்கியது. அதில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற நட்சத்திர சீனியர் வீரர்கள் இல்லாமல் சூரியகுமார் யாதவ் தலைமையில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்த இளம் இந்திய அணி வலுவான தென்னாபிரிக்காவையும் அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்துமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்பட்டது.

- Advertisement -

ரசிகர்கள் ஏமாற்றம்:
அந்த நிலைமையில் டர்பன் நகரில் உள்ள கிங்ஸ்மீட் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு துவங்க வேண்டிய அந்த போட்டி ஆரம்பத்திலேயே மழையால் தாமதமானது. அதனால் டாஸ் வீசுவதற்கு தாமதம் ஏற்பட்ட நிலையில் கொஞ்சம் வழி விட்டாலும் ஓவர்கள் குறைத்து போட்டியை நடத்துவதற்கு நடுவர்கள் தயாராக இருந்தனர். இருப்பினும் 2 மணி நேரமாக தொடர்ந்து வெளுத்து வாங்கிய மழை கொஞ்சம் கூட கருணை காட்டாமல் மைதானத்தை தண்ணீரால் நிரப்பியது.

அதனால் இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதிய முதல் டி20 போட்டி மழையால் டாஸ் கூட வீசப்படாமல் ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. குறிப்பாக 3 வகையான தொடர்களைக் கொண்ட இந்த மிகப்பெரிய சுற்றுப்பயணத்தின் முதல் போட்டியே மழையால் செய்யப்பட்டதால் “ஆரம்பத்திலேயே இப்படியா ஆகணும்” என்று ரசிகர்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்துகின்றனர்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக இப்போட்டி நடைபெறவிருந்த கிங்ஸ்மீட் மைதானத்தில் 2007 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக பவுல் அவுட் முறை மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக ஒரே ஓவரில் யுவராஜ் சிங் 6 சிக்சர்கள் அடித்தது உட்பட மகத்தான வெற்றிகளை பதிவு செய்துள்ள இந்தியா தோல்வியை சந்தித்ததே கிடையாது. அதனால் இப்போட்டியில் கண்டிப்பாக இந்திய அணி தென்னாப்பிரிக்காவையும் தோற்கடிக்கும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இதையும் படிங்க: மருமகனுக்காக அந்த மாதிரி வேலைய செய்யல.. அவசியமும் இல்ல.. ஷாஹீன் பற்றி ஷாஹித் அப்ரிடி கருத்து

அதே போல ரிங்கு சிங், ருதுராஜ் போன்ற இளம் வீரர்களும் தங்களுடைய கேரியரில் முதல் முறையாக தென்னாபிரிக்க மண்ணில் விளையாடுவதற்காக மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆனால் கடைசியில் ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி ரத்து செய்யப்பட்டதால் இந்திய வீரர்களும் ஏமாற்றத்தை சந்தித்தனர். இதைத்தொடர்ந்து இத்தொடரின் 2வது போட்டி டிசம்பர் 12ஆம் தேதி போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.

Advertisement