மருமகனுக்காக அந்த மாதிரி வேலைய செய்யல.. அவசியமும் இல்ல.. ஷாஹீன் பற்றி ஷாஹித் அப்ரிடி கருத்து

Shahid Afridi 2
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் செமி ஃபைனல் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் பரிதாபமாக வெளியேறியது. குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக வரலாற்றை மாற்றுவோம் என்று பேசிய பாகிஸ்தான் வரலாற்றில் தொடர்ந்து 8வது முறையாக உலகக் கோப்பையில் தோல்வியை சந்தித்து விமர்சனங்களுக்கு உள்ளானது.

அதை விட சென்னையில் நடைபெற்ற முக்கியமான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக பாகிஸ்தான் அவமான தோல்வியை பதிவு செய்தது. அந்த வகையில் மோசமாக செயல்பட்டு லீக் சுற்றுடன் வெளியேறிய பாகிஸ்தானின் தோல்விகளுக்கு பொறுப்பேற்று பாபர் அசாம் அனைத்து விதமான கேப்டன்ஷிப் பதவிகளையும் ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

- Advertisement -

அவசியமற்ற வேலை:
அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக ஷான் மசூத் மற்றும் டி20 கேப்டனாக ஷாஹீன் அப்ரிடி நியமிக்கப்பட்டார்கள். இந்நிலையில் ஷாஹீன் அப்ரிடி கேப்டனாக நியமிக்கப்படுவதற்கு நட்சத்திர முன்னாள் வீரர் ஷாஹித் அப்ரிடி பின்னணியில் முக்கிய காரணமாக இருந்ததாக பாகிஸ்தான் வட்டாரங்களில் செய்திகள் வலம் வருகின்றன. குறிப்பாக சமீபத்தில் தன்னுடைய மகளை சாகின் அப்ரிடிக்கு அவர் மணமுடித்து வைத்தார்.

அந்த வகையில் தம்முடைய மருமகன் தம்மை போலவே கேப்டனாக இருப்பதை விரும்பிய ஷாஹித் அப்ரிடி அதற்காக தம்முடைய நட்சத்திர அந்தஸ்தை பயன்படுத்தி பாகிஸ்தான் வாரியத்திடம் ஷாஹீன் அப்ரிடியை அடுத்த கேப்டனாக நியமிப்பதற்கு பரிந்துரை செய்ததாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் ஷாஹீனை கேப்டனாக நியமிப்பதற்கு தாம் ஒரு போதும் பரிந்துரை செய்யவில்லை அல்லது அதற்காக நேர்மைக்கு புறம்பான எந்த வேலையும் செய்யவில்லை என்று ஷாஹித் அப்ரிடி மறுப்பு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி கிரிக்கெட் பாகிஸ்தான் என்னும் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “நான் சத்தியம் செய்கிறேன். சாஹினை கேப்டனாக நியமிப்பதற்காக ஒரு போதும் யாரிடமும் பேசவில்லை. அல்லது நேர்மைக்கு புறம்பான எந்த வேலையும் செய்யவில்லை. இது போன்ற விஷயங்களில் நான் ஈடுபடுவதில்லை. அப்படி செய்வதற்கு எனக்கு அவசியமும் இல்லை. அதை செய்யவும் பிடிக்காது” என்று கூறினார்.

இதையும் படிங்க: அவர் சிறப்பா பேட்டிங் செஞ்சா மட்டுமே.. தெ.ஆ மண்ணில் இந்தியா ஜெயிக்க வாய்ப்பிருக்கு.. ஜேக் காலிஸ்

முன்னதாக பாகிஸ்தானில் நடைபெற்று வரும் பிஎஸ்எல் தொடரில் பாபர் அசாம் இதுவரை ஒரு கோப்பையை கூட கேப்டனாக வென்றதில்லை. மறுபுறம் வேகப்பந்து வீச்சாளராக அசத்தி வரும் சாகின் அப்ரிடி 2021 பிஎஸ்எல் கேப்டனாக கோப்பையை வென்றதால் சமீப காலங்களாகவே அவர் பாகிஸ்தானின் கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கள் காணப்பட்டது. அதற்கு தகுந்தார் போல் உலகக் கோப்பையில் பாபர் அசாம் தோல்வியை சந்தித்ததால் தற்போது ஷாஹீன் அப்ரிடி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement