இந்தியா – தெ.ஆ முதல் ஒன்டே நடைபெறும் ஜோஹன்ஸ்பர்க் மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம்.. பிட்ச் ரிப்போர்ட்

IND vs RSA 1st ODI 2023
- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று முடிந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1 – 1 என்ற கணக்கில் சமன் செய்த இந்தியா அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. விராட் கோலி உள்ளிட்ட முதன்மை வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள இத்தொடரில் கேஎல் ராகுல் தலைமையில் ரிங்கு சிங், ருதுராஜ், சாய் சுதர்சன் போன்ற இளம் வீரர்களுடன் இந்தியா களமிறங்குகிறது.

அதனால் இத்தொடரிலும் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா வெல்லுமா என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. மறுபுறம் டி20 தொடரில் வெற்றி வாய்ப்பை பறித்த இந்தியாவை ஐடன் மார்க்கம் தலைமையில் இத்தொடரில் தோற்கடிக்க தென்னாப்பிரிக்கா அணியும் தயாராகியுள்ளது.

- Advertisement -

வரலாற்று புள்ளிவிவரம்:
ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் இதுவரை 91 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் தென்னாப்பிரிக்கா 50 வெற்றிகளையும் இந்தியா 38 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ள நிலையில் 3 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டது. அதே போல தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் விளையாடிய 37 போட்டிகளில் இந்தியா 10 வெற்றிகளையும் 25 தோல்விகளையும் பதிவு செய்த நிலையில் 2 போட்டி மழையால் கைவிடப்பட்டது.

வாண்ட்ர்ரஸ் மைதானம்:
இத்தொடரின் முதல் போட்டி டிசம்பர் 17ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு ஜோஹன்ஸ்பர்க் நகரில் உள்ள வாண்ட்ரர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. கடந்த 1992 முதல் ஒருநாள் கிரிக்கெட்டை நடத்தி வரும் இந்த மைதானத்தில் இதுவரை மொத்தம் 53 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் தென்னாப்பிரிக்கா 40 போட்டிகளில் விளையாடி 30 வெற்றிகளையும் 10 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது.

- Advertisement -

இந்தியா இந்த மைதானத்தில் விளையாடிய 8 ஒருநாள் போட்டிகளில் 3 வெட்டுக்களையும் 5 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. இந்த மைதானத்தில் அதிக ரன்கள் (247) அடித்த இந்திய வீரராக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சாதனை படைத்துள்ளார்ர். இங்கு அதிக விக்கெட்களை எடுத்த இந்திய வீரர்களாக ஆசிஸ் நெஹ்ரா மற்றும் ஜவகள் ஸ்ரீநாத் (தலா 8) முதலிடத்தில் உள்ளனர். இங்கு இந்தியா பதிவு செய்துள்ள அதிகபட்ச ஸ்கோர் : 289/7, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, 2018

வெதர் ரிப்போர்ட்:
டிசம்பர் 16ஆம் தேதி இம்மைதானத்தை சுற்றிய பகுதிகளில் மழைக்கான வாய்ப்பில்லை என்று அங்குள்ள மாநில மையம் தெரிவிப்பதால் இப்போட்டி முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம்.

- Advertisement -

பிட்ச் ரிப்போர்ட்:
இம்மைதானம் வரலாற்றில் பேட்டிங்க்கு சாதகமாகவே இருந்து வருகிறது. எனவே சூழ்நிலைகளை அறிந்து விளையாடும் பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்றால் எளிதாக பெரிய ரன்களை குவிக்கலாம். அதே சமயம் நல்ல லைன், லென்த்தை பின்பற்றும் பவுலர்களும் விக்கெட்டுகளை எடுப்பார்கள். இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 241 ரன்களாகும்.

இதையும் படிங்க: கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரோஹித் சர்மாவை பார்ட்டி சி.எஸ்.கே நிர்வாகம் – வெளியிட்ட பதிவு

2006இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 434 ரன்களை இங்கு தான் தென்னாப்பிரிக்கா சேசிங் செய்து உலக சாதனை படைத்தது. மேலும் இங்கு வரலாற்றில் நடைபெற்ற போட்டிகளில் 23 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும் 30 முறை சேசிங் செய்த அணிகளும் வென்றுள்ளன. எனவே டாப் வெல்லும் கேப்டன் முதலில் பந்து வீச தீர்மானிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

Advertisement