கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரோஹித் சர்மாவை பார்ட்டி சி.எஸ்.கே நிர்வாகம் – வெளியிட்ட பதிவு

Dhoni-and-CSK
- Advertisement -

இந்தியாவில் அடுத்த 2024-ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹார்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக கடந்த இரண்டு சீசனங்களாக விளையாடி வந்த ஹார்டிக் பாண்டியாவை 15 கோடி கொடுத்து டிரேடிங் முறையில் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணி விலைக்கு வாங்கியது.

இப்படி ஹார்டிக் பாண்டியா ட்ரேடிங் செய்யப்பட்டதே மும்பை அணியின் கேப்டன் மாற்றத்திற்காக தான் என்று பலராலும் பேசப்பட்ட வேளையில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகம் அந்த அணியின் புதிய கேப்டனாக ஹார்டிக் பாண்டியாவை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ரோகித் சர்மா அந்த பதவியில் இருந்து வெளியேறி ஒரு சாதாரண வீரராக அந்த அணியில் தொடர இருக்கிறார்.

இப்படி ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டது மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்கள் மத்தியிலும் அதிக அளவு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வேளையில் கேப்டன் பதவியில் இருந்து வெளியற்றப்பட்ட ரோகித் சர்மாவிற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் நடப்பு சாம்பியனான சிஎஸ்கே அணியும் தங்களது சமூக வலைதள பக்கத்தின் மூலமாக ரோஹித் சர்மாவை பாராட்டி ஒரு பதிவினை வெளியிட்டுள்ளனர். அந்த வகையில் சிஎஸ்கே அணி சார்பாக வெளியிடப்பட்ட ஒரு பதிவில் குறிப்பிடப்பட்டதாவது : 2013-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகால ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக இருந்துள்ளீர்கள்.

இதையும் படிங்க : 136, 131க்கு இங்கிலாந்தை சுருட்டிய இந்திய மகளிரணி.. 25 வருட சாதனையை தூளாக்கி புதிய உலக சாதனை

உங்கள் அணிக்கு எதிராக ஒரு உற்சாகமான சவால் எங்களுக்கு இருந்தது. உங்கள் மீது நிறைய மதிப்பு வைத்திருக்கிறோம் ரோகித் என்று சிஎஸ்கே அணி நிர்வாகம் தங்களது கருத்துக்களை பகிர்ந்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணிகளாக பார்க்கப்படும் மும்பை மற்றும் சென்னை ஆகிய இரு அணிகளும் தலா ஐந்து கோப்பைகளுடன் சமநிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement