136, 131க்கு இங்கிலாந்தை சுருட்டிய இந்திய மகளிரணி.. 25 வருட சாதனையை தூளாக்கி புதிய உலக சாதனை

IND vs ENG Womens Test
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடியது. கடந்த டிசம்பர் 14ஆம் தேதி மும்பையில் துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் இன்னிங்ஸில் 428 ரன்கள் குவித்து ஆரம்பத்திலேயே வலுவான துவக்கத்தை பெற்றது.

இந்திய அணிக்கு அதிகபட்சமாக அறிமுக வீராங்கனை சுபாஷ் சதீஷ் 69, ஜெனிமா ரோட்ரிகஸ் 68, யாஸ்திகா பாட்டியா 66, தீப்தி சர்மா 67, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் 49 என முக்கிய வீராங்கனைகள் பெரிய ரன்கள் குவித்து அசத்தினார்கள். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக லாரன் பெல் மற்றும் சோபி எக்லஸ்டன் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -

உலக சாதனை வெற்றி:
அதை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்கில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி 136 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. குறிப்பாக அதிகபட்சமாக நட் ஸ்கீவர் 59 ரன்கள் எடுத்ததால் ஒரு கட்டத்தில் 126/4 என்ற வலுவான நிலையில் இங்கிலாந்து இருந்தது. அப்போது தீயாக செயல்பட்ட இந்திய வீராங்கனைகள் மேற்கொண்டு 10 ரன்களுக்கு எஞ்சிய 6 விக்கெட்டுகளையும் எடுத்து இங்கிலாந்தை 136 ரன்களுக்கு சுருட்டினார்கள்.

அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய இந்தியா சார்பில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 5, ஸ்னே ராணா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 292 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்திய அணி 186/6 ரன்கள் எடுத்த போது தங்களுடைய 2வது இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் 44*, ஷபாலி வர்மா 33 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக சார்லி டீன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

- Advertisement -

இறுதியில் 478 என்ற மெகா இலக்கை துரத்திய இங்கிலாந்து மீண்டும் இந்திய பவுலர்களின் சிறப்பான பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து வெறும் 131 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு அதிகபட்சமாக நட்சத்திர வீராங்கனை ஹீதர் நைட் 21, சார்லி டீன் 20* ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 4, பூஜா வஸ்திரர்க்கர் 3 விக்கெட்களை சாய்த்தனர்.

இதையும் படிங்க: ரோஹித் சர்மா நீக்கத்தால் சோகம்.. பும்ராவை தொடர்ந்து பாண்டியாவுக்கு.. சூரியகுமார் வெளியிட்ட எதிர்ப்பு பதிவு?

அதனால் 347 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணி என்ற 25 வருட சாதனையை தகர்த்து புதிய உலக சாதனையுடன் இத்தொடரின் கோப்பையை வென்றது. இதற்கு முன் 1998ஆம் ஆண்டு கொழும்பு நகரில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை மகளிரணி 309 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே முந்தைய சாதனையாகும். இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய தீப்தி சர்மா ஆட்டநாயகி விருதை வென்றார்.

Advertisement