குழந்தை பிறந்த 4 நாட்களில் டியூட்டிக்கு கிளம்பிய பும்ரா. பாக் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா? – விவரம் இதோ

Bumrah
Advertisement

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா கடந்த ஆண்டு ஏற்பட்ட காயம் காரணமாக கிட்டத்தட்ட பத்து மாதங்களாக எவ்வித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாமல் சிகிச்சை பெற்று வந்தார். மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிய அவர் ஆசியக் கோப்பை தொடருக்கு முன்பாக பயிற்சியையும் துவங்கினார். அதோடு தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்ற அவர் தொடர் சிகிச்சை மற்றும் பயிற்சிக்கு பிறகு தனது முழு பிட்னஸையும் நிரூபித்தார்.

அதன் பின்னர் அயர்லாந்து அணிக்கு எதிரான சுற்றுப் பயணத்தின் போது இந்திய அணியின் கேப்டனாக அணிக்கு திரும்பிய அவர் கோப்பையையும் கைப்பற்றி தந்தார். அதனை தொடர்ந்து எதிர்வரும் உலக கோப்பை தொடருக்கு முன்பாக ஆசியக் கோப்பை தொடரில் இடம் பெற்றிருந்த அவர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்று விளையாடியிருந்தார்.

- Advertisement -

ஆனால் அதன்பிறகு அடுத்ததாக நடைபெற்ற நேபாள் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக நாடு திரும்பிய அவர் சூப்பர் போஃர் சுற்றுக்கு முன்பாக அணிக்கு திரும்புவார் என்று கூறப்பட்டது.

இப்படி ஆசிய கோப்பை தொடரை போட்டியை தவிர்த்து நாடு திரும்பிய அவர் மீது விமர்சனம் எழுந்த வேளையில் அவர் தனது முதல் குழந்தை பிறப்பிற்காகவே நாடு திரும்பினார் என்றும் அதன் பிறகு மீண்டும் அணிக்கு திரும்புவார் என்றும் கூறப்பட்டது.

- Advertisement -

அதன்படியே கடந்த சில தினங்களுக்கு முன்னால் ஆண் குழந்தைக்கு தந்தையாக மாறிய பும்ரா தற்போது மீண்டும் நான்கே நாட்களில் இலங்கை சென்று இந்திய அணியுடன் இணைந்துள்ளார். எதிர்வரும் உலக கோப்பை தொடரும், இந்த ஆசிய கோப்பை தொடரும் இந்திய அணிக்கு மிக முக்கிய தொடர்களாக பார்க்கப்படும் நிலையில் குழந்தை பிறந்த சில தினங்களிலேயே அவர் இந்திய அணியுடன் இணைந்து தற்போது பயிற்சியையும் மேற்கொண்டு வருகிறார்.

இதையும் படிங்க : ரொம்ப பெருமை பேசாதீங்க.. அதுல பாகிஸ்தானுக்கு கொஞ்சமும் சளைக்காம இந்தியாவும் சமம் தான் இருக்கு – சஞ்சய் பங்கர் பதிலடி

அவரது இந்த அர்ப்பணிப்பு ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்வரும் இவ்விரு தொடர்களிலும் முக்கியமான வீரராக பார்க்கப்படும் பும்ரா நாளை பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் போஃர் சுற்றின் போட்டியில் விளையாடுவார் என்றும் கூறப்படுகிறது.

Advertisement