IND vs PAK : கடைசி நேரத்தில் மொக்கையான ஒரு காரணத்தை கூறி ஷ்ரேயாஸ் ஐயரை – வெளியேற்றிய ரோஹித் சர்மா

Rohit-and-Shreyas
- Advertisement -

நடப்பு ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் ஃபோர் சுற்று ஆட்டமானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சூப்பர் ஃபோர் சுற்றில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது தங்களது முதலாவது போட்டியில் உலகின் நம்பர் ஒன் ஒருநாள் அணியான பாகிஸ்தான் அணிக்கு எதிராக இன்று விளையாடி வருகிறது. அந்த வகையில் இன்று கொழும்பு மைதானத்தில் மதியம் 3 மணி அளவில் இப்போட்டி துவங்கியது.

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலில் தங்களது அணி பந்துவீசும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணியானது தங்களது ஆட்டத்தை தொடர்ந்து விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏதாவது மாற்றம் இருக்குமா? என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் இரண்டு முக்கிய மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டன. அதன்படி கடந்த போட்டியில் குழந்தை பிறப்பிற்காக நாடு திரும்பியிருந்த பும்ரா மீண்டும் அணிக்கு திரும்பி இருக்கிறார்.

அதன் காரணமாக முகமது ஷமி வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக பும்ரா நேரடியாக அணியில் இடம் பெற்றார். அதை தவிர்த்து கே.எல் ராகுல் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளதால் ஷ்ரேயாஸ் ஐயர் வெளியேற்றப்பட்டு அவர் பிளேயிங் லெவனில் இடம் பிடித்துள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் ஷ்ரேயாஸ் ஐயரின் நீக்கம் குறித்து டாசின் போது பேசிய ரோஹித் சர்மாவின் கருத்தே தற்போது அனைவரது மத்தியிலும் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. ஏனெனில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு “முதுகு பிடிப்பு” என்று மொக்கையான ஒரு காரணத்தை கூறி ரோகித் சர்மா சப்பை கட்டு கட்டியுள்ளார்.

இதையும் படிங்க : ராகுல் மாதிரி பிளேயர்ஸ் கத்துக்கணும், நாட்டுக்காக தோனி காயத்துடன் விளையாடிய – 2016 பின்னணி பற்றி சஞ்சய் பங்கர் பேட்டி

இதனை கவனித்த ரசிகர்கள் பலரும் ரோஹித் சர்மா நேரடியாகவே ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக கே.எல் ராகுல் உள்ளே வந்திருக்கிறார் என்று கூறியிருக்கலாம் அதை விடுத்து எதற்கு இப்படியெல்லாம் சாக்கு போக்கு சொல்லனும் என்பது போன்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். என்னதான் கேஎல் ராகுல் முக்கிய வீரராக இருந்தாலும் நேரடியாக அவரை இந்த போட்டியில் விளையாட வைத்தது தவறு என்றும் சிலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement