IND vs PAK : பாதி மேட்ச் கூட நடக்கல. வேலையை காட்டிய மழை. தொடர்ந்து நீடித்தால் என்ன ஆகும்? – ரூல்ஸ் சொல்வது என்ன?

Rain-Asia-Cup
- Advertisement -

இலங்கை நாட்டில் நடைபெற்று வரும் நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்பட்ட, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று கொழும்பு நகரில் மதியம் 3 மணி அளவில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார்.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியானது முதல் விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்து நல்ல அடித்தளத்தை அமைத்தது. 56 ரன்கள் எடுத்திருந்த கேப்டன் ரோகித் சர்மா ஷதாப்கான் பந்துவீச்சில் ஆட்டம் இழந்து வெளியேறியதும் அடுத்த ஓவரிலேயே சுப்மன் கில்லும் 58 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார்.

- Advertisement -

இதன் காரணமாக 123 ரண்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்த இந்திய அணியானது தற்போது விராட் கோலி மற்றும் கே.எல் ராகுல் ஆகியோரது பாட்னர்ஷிப்புடன் தொடர்ந்து விளையாடி வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்பாகவே வெளியான வானிலை அறிக்கையின் படி போட்டியின் போது மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்ட வேளையில் இந்த போட்டியின் 24 ஓவர்கள் முடிவடைந்து 25-வது ஓவர் வீசும் போது மழை பெய்ய துவங்கியது. இவ்வேளையில் தற்போது இந்திய அணி 24.1 ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை குவித்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி மழையால் மீண்டும் தடைப்பட்டுள்ளதால் எப்போது ஆட்டம் துவங்கும் என்று எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மேலும் மழை தொடர்ந்து பெய்யும் பட்சத்தில் போட்டியின் முடிவு என்ன ஆகும்? என்பதே பலரது கேள்வியாகவும் இருக்கிறது. அதன்படி இன்று முழுவதுமே தொடர்ந்து மழை பெய்தால் விதிமுறை கூறுவது யாதெனில் :

இதையும் படிங்க : வீடியோ : 6, 6, 4.. பாக் துணை கேப்டனை பந்தாடிய ரோஹித் சர்மா – சச்சின், சங்ககாரா, ஜெயசூர்யாவை முந்தி புதிய சாதனை

கடந்த சில தினங்களுக்கு முன்னரே வானிலை அறிக்கையில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டதால் ஏற்கனவே ஆசிய கோப்பை கிரிக்கெட் கவுன்சிலானது இந்தியா பாகிஸ்தான் மோதும் இந்த போட்டிக்கான ரிசர்வ் டேவை அறிவித்துள்ளது. அதன்படி ஒருவேளை இன்று போட்டி நடக்காத பட்சத்தில் நாளை போட்டி விட்ட இடத்தில் இருந்து துவங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement