வீடியோ : 6, 6, 4.. பாக் துணை கேப்டனை பந்தாடிய ரோஹித் சர்மா – சச்சின், சங்ககாரா, ஜெயசூர்யாவை முந்தி புதிய சாதனை

Rohit Sharma Vs PAK
Advertisement

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 10ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்ற முக்கியமான சூப்பர் 4 போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. மழையின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்த நிலையில் இந்திய அணியில் கேஎல் ராகுல், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு கடந்த போட்டியில் தெறிக்க விட்ட சாகின் அப்ரிடி இம்முறையும் அச்சுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் முதல் ஓவரிலேயே சிக்ஸர் அடித்த ரோகித் சர்மா உலகிலேயே முதல் ஓவரில் சாகின் அப்ரிடிக்கு எதிராக சிக்சர் அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற மிகப்பெரிய பெயரைப் பெற்று அதிரடியை துவங்கினார். அவருக்கு ஆதரவாக மறுபுறம் சுப்மன் கில் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடி வேகமாக ரன்களை சேர்த்தார். அந்த வகையில் பாகிஸ்தான் பவுலர்கள் ஆதிக்கம் செலுத்தக்கூடிய பவர் பிளே ஓவர்களில் மிகச் சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி இந்தியாவுக்கு வலுவான துவக்கத்தை கொடுத்தது.

- Advertisement -

ரோஹித்தின் சாதனை:
மேலும் பவர் பிளே முடிந்ததும் வந்த பாகிஸ்தான் துணை கேப்டன் ஷடாப் கான் வீசிய 13வது ஓவரின் 4வது பந்தில் மிட் விக்கெட் திசையில் சிக்ஸர் அடித்த ரோகித் சர்மா அடுத்த பந்திலும் மிரட்டலான சிக்ஸர் பறக்க விட்டு ரசிகர்களை மகிழ்வித்தார். அதோடு நிற்காமல் கடைசி பந்திலும் கட் ஷாட் அடித்து பவுண்டரியை பறக்க விட்ட அவரால் அந்த ஓவரில் மட்டும் இந்தியா 19 ரன்கள் குவித்து அசத்தியது.

அதே வேகத்தில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட ரோகித் சர்மா 6 பவுண்டரி 4 சிக்சருடன் 56 (49) ரன்கள் குவித்து சடாப் கான் சுழலில் அவுட்டானார். இந்த ரன்களையும் சேர்த்து ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக மட்டும் மொத்தம் 6 முறை ரோஹித் சர்மா 50க்கும் மேற்பட்ட ரன்களை அடித்துள்ளார்.

- Advertisement -

இதன் வாயிலாக அனைத்து விதமான ஆசிய கோப்பை வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக முறை 50க்கும் மேற்பட்ட ரன்களை ரன்களை குவித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கர், குமார் சங்ககாரா, ஜெயசூர்யா ஆகியோரின் சாதனைகளை உடைத்த ரோகித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ரோகித் சர்மா : 6, பாகிஸ்தானுக்கு எதிராக
2. சச்சின் டெண்டுல்கர் : 5, இலங்கைக்கு எதிராக
3. குமார் சங்ககாரா : 5, இந்தியாவுக்கு எதிராக
4. சனாத் ஜெயசூர்யா : 5, வங்கதேசத்துக்கு எதிராக

அந்த வகையில் அவருடன் சேர்ந்து 121 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்தும் சுப்மன் கில் 10 பவுண்டரியுடன் 58 (52) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதனால் முதல் 20 ஓவர்களில் இந்தியா 135/2 ரன்கள் குவித்து போட்டியில் நல்ல துவக்கத்தை பெற்றுள்ளது. குறிப்பாக கடந்த போட்டியில் மிரட்டலை கொடுத்த பாகிஸ்தான் பவுலர்களுக்கு இம்முறை இந்திய பேட்ஸ்மேன்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

Advertisement